Tiger 3 : ஒட்டுமொத்த திரையரங்கத்தையும் புக்செய்த சல்மான் கான் ரசிகர்.. யார் இந்த ஃபைசல் ஷைக்?
சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 படத்தை தனியாக பார்த்து ரசிக்கும் வகையில் ஒட்டுமொத்த திரையரங்கத்தையும் புக் செய்துள்ளார் இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற ரசிகர்
டைகர் 3
மனீஷ் ஷர்மா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்து உருவாகி இருக்கும் படம் டைகர் 3 படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இம்ரான் ஹஸ்மி, ரித்தி தோக்ரா, அஷ்தோஷ் ரானா, விஷால் ஜேத்வா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். டைகர் 3 படம் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது . யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸின் வெளியாகும் ஐந்தாவது படம். முன்னதாக சல்மான் கான் நடித்து வெளியான ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹேய், பதான், வார் ஆகிய நான்கு படங்களின் தொடர்ச்சியாக தற்போது இந்தப் படம் கடந்த தீபாவளி அன்று வெளியானது.
ஸ்பை யுனிவர்ஸ்
டைகர் 3 படத்தில் நடிகர் ஷாருக் கான் மற்றும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியவர்கள் சிறப்புக் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். இதனால் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் வெளியான முதல் நாளில் மட்டுமே படம் சுமார் 94 கோடி உலகளவில் வசூல் செய்தது. இந்தி திரைப்படம் வரலாற்றில் தீபாவளி அன்று வெளியாகியப் படங்களில் அதிக வசூல் ஈட்டியப் படமாக டைகர் 3 படம் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றுடன் 15 ஆவது நாளாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் டைகர் 3 திரைப்படம் இதுவரை ரூ 447 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
Catch the high octane action unfold in cinemas now.
— Yash Raj Films (@yrf) November 27, 2023
Watch #Tiger3 at your nearest big screen in Hindi, Tamil & Telugu.
Book your tickets - https://t.co/K36Si5lgmp | https://t.co/RfOSuJumYF #YRF50 | #YRFSpyUniverse pic.twitter.com/LkxXD2DwbW
ஒட்டுமொத்த திரையரங்கையும் புக் செய்த ரசிகர்
BHAIJAAN’s time cannot be shared with anyone else ♥️#SalmanKhan #Tiger3 #Faisusquad pic.twitter.com/Ske214AmwM
— Faisal Shaikh👑 (@Mr_Faisu_07) November 27, 2023
எல்லா கொண்டாட்டங்களையும் கொஞ்சம் மிகையாக செய்வதே சல்மான் கான் ரசிகர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. சமீபத்தில் திரையரங்கத்திற்கு உள்ளே பட்டாசுகளை வெடித்து மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கியது ஒரு பக்கம் சர்ச்சையானது என்றால் தற்போது சல்மான் கானை பார்த்து தனியாக பார்த்து ரசிக்க ஒட்டு மொத்த திரையரங்கத்தையும் புக் செய்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் இன்னொரு சல்மான் கான் ரசிகர். ஃபைசல் ஷைக் என்கிற சல்மான் கான் ரசிகர் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலமானார். டிக் டாக் தடைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராமில் இவருக்கும் 30 மில்லியன் வரை ஃபாலோவர்ஸ் இருந்து வருகிறார்கள்.
தீவிர சல்மான் கான் ரசிகரான இவர் சமீபத்தில் டைகர் 3 படம் பார்க்க ஒட்டுமொத்த திரையரங்கத்திற்கான சீட்களையும் புக் செய்துள்ளார். இதன் வீடியோவை தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார் அவர். தனது இளமைக் காலத்தில் தான் வறுமையில் கஷ்டப்பட்டதைக் குறித்த தனது நேர்காணல் ஒன்றில் ஃபைசல் ஷைக் கூறியதை பலரும் இந்த வீடியோவைப் பார்த்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.