Sai Pallavi: நாக சைதன்யாவுடன் ரொமான்ஸ்.. காதலர் தின வீடியோ வெளியிட்ட சாய் பல்லவி!
சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா நடித்து வரும் தண்டேல் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது
காதலர் தின சிறப்பாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சாய் பல்லவி ரொமான்டிக் ஆன வீடியொ ஒன்றை வெளிடிட்டுள்ளார்கள்.
நாக சைதன்யா
டோலிவுட் சினிமாவில் காதல் பறவைகளாக வலம் வந்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா - சமந்தா தம்பதி, 4 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த 2021ஆம் பிரிய முடிவெடுத்து. விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் மன உளைச்சல் , மயோசிட்டிஸ் பாதிப்பு என பலவற்றையும் கடந்து சமந்தா தற்போது டோலிவுட், பாலிவுட்டில் வரிசையாக திரைப்படங்கள், சீரிஸ்களில் நடித்து வருகிறார். மறுபுறம் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஷோபிதாவை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத்தான்டி வருவாயா படத்தின் தெலுங்கு பிரதியில் சமந்தா மற்றும் நாக சைதன்யா முதல் முறையாக இணைந்து நடித்தார்கள். கோலாகலமாக இவர்களது திருமணம் நான்கு ஆண்டுகளில் முடிவடையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை . திருமண முறிவிற்குப் பின் இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. ஆனால் விவாகரத்துப் பெற்று 3 ஆண்டுகளுக்குப் பிறகும் இருவரும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக சுற்றி வருகிறார்கள்.
தனது திருமண முறிவு குறித்து நடிகர் நாக சைதன்யா கடைசியாக பேசியபோது “ஆமாம். நாங்கள் பிரிந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நாங்கள் முறையாக விவாகரத்து செய்து ஒரு ஆண்டு ஆகிறது. நாங்கள் இருவரும் எங்கள் வாழ்க்கையில் நகர்ந்து விட்டோம். என் வாழ்க்கையின் அந்தக் கட்டத்தில் எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு” என்று கூறினார்
சாய் பல்லவியுடன் ரொமான்ஸ்
Happy Valentine’s ☺️❤️ pic.twitter.com/3yoJm3uU56
— Sai Pallavi (@Sai_Pallavi92) February 14, 2024
தற்போது இன்று காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் நாக சைதன்யா நடிகை சாய் பல்லவியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா தற்போது நடித்து வரும் தண்டேல் படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது. சந்து மொடெத்தி இந்தப் படத்தை இயக்குகிறார். கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது
எஸ்.கே 21
நடிகர் சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகி வருகிறது எஸ்.கே 21. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்க, சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையைமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் வெளியாக இருக்கிறது