Cobra in Moscow : ரஷ்ய மொழியில் கோப்ரா... வெளியான ரிலீஸ் தேதி...
ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மாஸ்கோவில் வெளியாக தயாரான 'கோப்ரா' திரைப்படம். ரிலீஸ் தேதி வெளியானது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'கோப்ரா'. எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத இப்படம் தற்போது ரஷ்யாவில் வெளியாக தயாராகி வருகிறது என்ற அப்டேட் லேட்டஸ்டாக வெளியாகியுள்ளது.
ஏமாந்த விகாரம் ரசிகர்கள் :
செவன்த் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிப்பில் பல கெட்டப்புகளில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தில் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உள்ளிட்ட பலரும் நடிக்க இசையமைத்து இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். பல முறை தள்ளிப்போன இப்படத்தின் ரிலீஸ் ஒரு வழியாக ஆகஸ்ட் 31ம் தேதி வெளியானது. வழக்கம் போல நடிகர் விக்ரமின் நடிப்பு அபாரமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதையால் கலவையான விமர்சனம் பெற்ற இப்படத்தால் மிகுந்த ஏமாற்றமடைந்தனர் விக்ரம் ரசிகர்கள்.
Actor @chiyaan #Vikram 's #Cobra 's Russian dubbed version to release in #Moscow on Dec 15th.. At an Indian Film Festival there..#VijaySubramanian of #WhiteNights Entertainment to release #Cobra in Russia 🇷🇺
— Ramesh Bala (@rameshlaus) December 10, 2022
He is currently producing #DemonteColony2 in Tamil.. pic.twitter.com/9O0o1GWlNX
ரஷ்யாவில் கோப்ரா :
அந்த வகையில் 'கோப்ரா' திரைப்படம் ரஷ்ய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு மாஸ்கோவில் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் டிசம்பர் 15ம் தேதி வெளியாக தயாராகவுள்ளது. ரஷ்யாவில் கோப்ரா திரைப்படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளார் வொயிட்நைட்ஸ் என்டர்டெய்ன்ட்மென்ட் நிறுவனத்தின் சார்பில் விஜய் சுப்ரமணியன்.
Demonte Colony is one of the best film in @arulnithitamil anna career and my most favourite one too..!
— Thala Sudharsan (@ThalaSudharsa20) November 30, 2022
Waiting eagerly for yet another Blockbuster Material from Arulnithi - @AjayGnanamuthu combo 💥#DemonteColony2 shooting begins!#VengeanceOfTheUnholy pic.twitter.com/KWcPZjiQOf
டிமான்ட்டி காலனி 2 :
2015ம் ஆண்டு அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று ஒரு வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து தற்போது ‘டிமான்ட்டி காலனி 2' படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் இப்படத்திலும் நடிகர் அருள்நிதி நடித்து வருகிறார்.