மேலும் அறிய

Sanjay Dutt Injured : 'கேடி' ஷூட்டிங் ஸ்பாட்டில் டம்மி குண்டு வெடித்ததாக பரவிய தகவல்..  விளக்கமளித்த 'லியோ' வில்லன்

'கேடி - தி டெவில்' படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோ துருவாவுடன் சண்டையிடும் போது டம்மி குண்டு வெடித்ததில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நடிகர் சஞ்சய் தத்.

பாலிவுட் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் சஞ்சய் தத் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் மிரட்டலான வில்லனாக அதீரா என்ற கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை அதிர வைத்தார். மிகவும் பயங்கரமான வில்லனாக திரையில் தோன்றிய சஞ்சய் தத்திற்கு அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'லியோ' படத்தின் வில்லனாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்னர் தான் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியுள்ளார். 

Sanjay Dutt Injured : 'கேடி' ஷூட்டிங் ஸ்பாட்டில் டம்மி குண்டு வெடித்ததாக பரவிய தகவல்..  விளக்கமளித்த 'லியோ' வில்லன்
கேடி - தி டெவில் படத்தில் சஞ்சய் தத் :

நடிகர் சஞ்சய் தத் தற்போது கன்னடத்தில் பிரேம் இயக்கத்தில் நடிகர் துருவா சர்ஜா நடித்து வரும் 'கேடி - தி டெவில் ' திரைப்படத்திலும் முக்கியமான வில்லனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கேடி படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் பெங்களூரில் நடைபெற்று வருகிறது. பெங்களூரில் உள்ள மாகடி சாலையில் ஹீரோ துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத் இடையே அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த சமயத்தில் சண்டை காட்சிகளுக்காக டம்மி குண்டுகள் பயன்பட்டதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகள் நடைபெறுகையில் எதிர்பாராத விதமாக டம்மி குண்டுகள் வெடித்ததில் நடிகர் சஞ்சய் தத்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

மருத்துவமனையில் அனுமதி :

டம்மி குண்டுகள் வீரியத்துடன் வெடித்த இடத்திற்கு மிக அருகில் சஞ்சய் தத் இருந்ததால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரின் முழங்கை, கை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதாகவும் அதற்கு முதலுதவி  செய்யப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என சோசியல் மீடியாவில் செய்திகள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்து தகுந்த விளக்கம் எதையும் இதுவரையில் கேடி படக்குழு தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தால் சுற்றியுள்ள பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் நீண்ட நேரத்திற்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.   

Sanjay Dutt Injured : 'கேடி' ஷூட்டிங் ஸ்பாட்டில் டம்மி குண்டு வெடித்ததாக பரவிய தகவல்..  விளக்கமளித்த 'லியோ' வில்லன்

சஞ்சய் தத் விளக்கம் :

சோசியல் மீடியாவில் சஞ்சய் தத் விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பரவி வரும் தகவலுக்கு தனது ட்விட்டர் மூலம் விளக்கமளித்துள்ளார் சஞ்சய் தத். "எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை நான் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். கடவுள் அருளால் நான் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன் மற்றும்  என்னுடைய காட்சிகளை படமாக்கும் போது படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அணுகியதற்கும் உங்கள் அக்கறைக்கும் அனைவருக்கும் நன்றி" என போஸ்ட் செய்துள்ளார். இதை பார்த்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதி அடைந்துள்ளனர் அவரது தீவிர ரசிகர்கள். 

ரீ என்ட்ரி கொடுக்கும் ஷில்பா ஷெட்டி :

1970களில் பெங்களூரில்  நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது 'கேடி - தி டெவில்' திரைப்படம். இப்படம்  ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு கன்னட திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்கிறார் அர்ஜுன் ஜன்யா.   
  
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Gold Silver Rates Dec.22nd: ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
ஐயோ போச்சே.! மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கிய தங்கத்தின் விலை; வெள்ளியின் விலையும் உச்சம்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
Mahindra Scorpio N: புத்தாண்டில் மஹிந்த்ராவின் முதல் சம்பவம் - ஸ்கார்ப்பியோ அப்க்ரேட், என்ன இருக்கு? எப்படி வரும்?
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
தானத்தில் தழைத்தோங்கும் தமிழ்நாடு.. 5 ஆண்டுகளில் உடல் உறுப்பு தானத்தில் மாஸ் காட்டிய தமிழகம்!
Trump Epstein Files: எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
எப்ஸ்டீன் கோப்புகள்; மீண்டும் தோன்றிய ட்ரம்ப்பின் புகைப்படங்கள்; நீதித்துறை அளித்த விளக்கம் என்ன.?
TVK VIJAY: 70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
70 தொகுதிகளில் தவெக டெபாசிட் இழக்கும்.!! விஜய்க்கு ஷாக் கொடுக்கும் இந்து மக்கள் கட்சி
Embed widget