ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு பிடித்ததா ’நாட்டு நாட்டு’? ஜூராஸிக் பார்க் இயக்குநரைச் சந்தித்த ராஜமௌலி
யுனிவர்சல் பிக்சர்ஸ் நடத்திய விருந்தில் இரண்டு திரைப்பட இயக்குநர்களும் ஒருவரையொருவர் சந்தித்தனர்
![ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு பிடித்ததா ’நாட்டு நாட்டு’? ஜூராஸிக் பார்க் இயக்குநரைச் சந்தித்த ராஜமௌலி RRR team SSrajamouli and MM keeravani meets Steven spielberg in RRR movie golden globe promotions ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குக்கு பிடித்ததா ’நாட்டு நாட்டு’? ஜூராஸிக் பார்க் இயக்குநரைச் சந்தித்த ராஜமௌலி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/254269f3cbc09cfca4effa392246bb771673534507680544_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜாஸ், ஜுராசிக் பார்க், இடி மற்றும் சமீபத்திய தி ஃபேபல்மேன்ஸ் போன்ற படங்களை இயக்கிய பிரபல அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கைச் இயக்குநர் ராஜமௌலி சந்தித்துள்ளார். யுனிவர்சல் பிக்சர்ஸ் நடத்திய விருந்தில் இரண்டு திரைப்பட இயக்குநர்களும் ஒருவரையொருவர் சந்தித்தனர். ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோல்டன் க்ளோப் விருதுகளைப் பெற்றதை அடுத்து அதன் ப்ரோமோ தொடர்பாக அமெரிக்காவில் இருக்கும் ராஜமௌலி, ஸ்பீல்பெர்க்குடன் இருக்கும் சில புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
I just met GOD!!! ❤️🔥❤️🔥❤️🔥 pic.twitter.com/NYsNgbS8Fw
— rajamouli ss (@ssrajamouli) January 14, 2023
முதல் புகைப்படத்தில், ராஜமௌலி ஒரு சிறிய உரையாடலுக்காக ஸ்பீல்பெர்க்கின் முன் நிற்கிறார், அவரைப் பார்த்து வியந்த நிலையில் காட்சி அளிக்கிறார் ராஜமௌலி. அடுத்த புகைப்படத்தில் அவர் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியுடன் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோர் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்ட ராஜமௌலி, “நான் சற்றுமுன் கடவுளை சந்தித்தேன்!!! ❤️🔥❤️🔥❤️🔥." எனக் குறிப்பிட்டிருந்தார். அதே படங்கள் DVV என்டர்டெயின்மென்ட்டின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “#SSRRajamouli மற்றும் #StevenSpielberg!! ❤️🔥❤️🔥❤️🔥." என்கிற ஹேஷ்டேக்குடன் பகிரப்பட்டுள்ளது.
And I couldn’t believe it when he said he liked Naatu Naatu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏 pic.twitter.com/BhZux7rlUK
— mmkeeravaani (@mmkeeravaani) January 14, 2023
Had the privilege of meeting the God of movies and say in his ears that I love his movies including DUEL like anything ☺️☺️☺️ pic.twitter.com/Erz1jALZ8m
— mmkeeravaani (@mmkeeravaani) January 14, 2023
இந்தப் படங்களைத் தனது பக்கத்தில் பகிர்ந்த கீரவாணி, “அவர் எனது நாட்டு நாட்டு பாடல் பிடித்திருந்ததாகச் சொன்னது கூடுதல் அதிசயம்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)