RRR Box Office: 900 கோடி.. ஆமாப்பு.. வசூல் வேட்டை இன்னும் நிக்கல.. அமீர்கான் படத்தை பின்னுக்குத்தள்ளிய ஆர்.ஆர்.ஆர்!
இதுவரை உலக அளவில் 900 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் இப்படம், புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. அதாவது, 900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பாகுபலி என்னும் பிரம்மாண்ட படைப்பிற்கு பிறகு அதன் இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்(RRR) திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1920-ஆம் காலக்கட்டத்தில் வாழ்ந்த அல்லுரி சீதா ராமராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகிய இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.
படத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியானது.
இந்நிலையில், கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியான இப்படம் இன்று வரை பல நூறு கோடிகள் வசூலை குவித்திருக்கிறது. இதுவரை உலக அளவில் 900 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் இப்படம், புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. அதாவது, 900 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. தங்கல், பாகுபலி தி கன்க்ளூசன், பஜ்ரங்கி பைஜான், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படங்களை அடுத்து ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
#RRRMovie WW Box Office
— Manobala Vijayabalan (@ManobalaV) April 4, 2022
Reaches a new milestone of MAMMOTH ₹900 cr.
Week 1 - ₹ 709.36 cr
Week 2
Day 1 - ₹ 41.53 cr
Day 2 - ₹ 68.17 cr
Day 3 - ₹ 82.40 cr
Total - ₹ 901.46 cr
Share alone crossed historical ₹500 cr mark in just 10 days.
இதே நிலை தொடர்ந்தால், அடுத்தடுத்த நாட்களின் மேலும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்