Renee Sen about Sushmita Sen: ‘ஐ லவ் யூ அம்மா.. ரொம்ப பெருமையா இருக்கு..’ ‘ரட்சகன்’ பட நடிகையை நினைத்து நெகிழ்ந்த மகள்!
Renee Sen about Sushmita Sen: முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னின் பிறந்தநாளையொட்டி அவரது மகள், ஆசையாக அவருக்காக எமோஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
1994ஆம் ஆண்டில் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றவர் சுஷ்மிதா சென். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவரையே சாரும். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற பிறகு, தொடர்ந்து படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பதின்ம வயதிலேயே, பல உயரம் தொட்டவர்களுள் ஒருவராக கருதப்படுபவர் சுஷ்மிதா.
1996 ஆம் ஆண்டில், தசக் என்ற படம் மூலம் பாலுவுட்டில் கால் பதித்தார். அதன் பிறகு, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவுடன் இணைந்து ரட்சகன் படத்தில் நடித்தார். “சோனியா சோனியா..” பாடலின் மினுக் மினுக் என நடனமாடி அனைவரையும் சொக்க வைத்தார். அதன் பிறகு ஏனோ தமிழ் படங்கள் எதிலிமே அவர் நடிக்கவில்லை. 2000 கால கட்டங்களில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக விளங்கியவர் இவர்.
ஷாருக்கான், அஜய் தேவ்கன், சல்மான் கான் என பல முன்னணி ஹீரோக்களுடன் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து விட்டார் சுஷ்மிதா. நடிப்பு மட்டுமன்றி, நடன நிகழ்ச்சிகளை நடத்துவது, பிரபஞ்ச அழகி போட்டியின் நடுவராக இருப்பது பன்முகத் திறமையுடன் இருப்பவர் இவர். சுஷ்மிதா சென்னிற்கு, இன்றுடன் 47 வயது ஆகிறது.
சுஷ்மிதாவின் மகள் அன்பு பதிவு:
சுஷ்மிதா சென், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சுஷ்மிதாவிற்காக அவரது அன்பு மகள் ரெனே, ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அதில், “ஹேப்பி பர்த்டே அம்மா..நீங்கள் உங்களது வாழ்க்கையின் சிறந்த கட்டத்தில்நுழைகிறீர்கள். உங்களது மகளாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். உங்களது சாதனைகளை கண்கூடாக பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு தைரியமாக இருக்கவும், இரக்கத்துடன் இருக்கவும் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி. உங்கள் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். இனிய 47 ஆவது பிறந்தநாள்” என்று எமோஷனலாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.