மேலும் அறிய

நினைவு நாளில் நினைவுக்கு வரும் சுஷாந்த் சிங்கின் சில திரைப்படங்கள்...!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் அகால மரணம் இந்திய திரை ரசிகர்கள் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எத்தனையோ படங்கள் நடித்திருந்தால் அவர் நடித்த MS Dhoni தான் மக்கள் மனதில் அவரை நீங்கா இடம் பிடிக்க வைத்தது.

2வது நினைவு நாள்:

2020ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி 34 வயதான சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் இறந்து கிடந்தார். முதலில் அது தற்கொலை என்று கூறப்பட்டது. ஆனால், போகப் போக இந்த வழக்கு பல சிக்கல்களை சந்தித்த வண்ணம் இருந்தது.
இந்த வழக்கை மும்பை காவல்துறை, பிகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (NCB), அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன.

மும்பை காவல்துறை நடத்திய முதல்கட்ட விசாரணையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சிபிஐ இன்னும் வழக்கு விசாரணை முடிவுகளை வெளியிடவில்லை. 

பாலிவுட் நடிகையும் சுஷாந்தின் காதலி என்று கூறப்பட்ட ரியா சக்ரபர்த்தி, சுஷாந்தின் நண்பர் சித்தார்த், அவரது சமையல்காரர் நீரஜ் மற்றும் திபேஷ் சாவந்த் ஆகியோரிடம் இருந்து சிபிஐ வாக்குமூலம் பெற்றது. சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் என்பதை அறிய ஒரு வல்லுநர் குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் மருத்துவர் சுதிர் குப்தா தலைமை தாங்கினார். அவர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாக அறிக்கை கொடுத்தார்.

வழக்குகள், சர்ச்சைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க சுஷாந்த் இறந்து 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆம் இன்று அவருடைய இரண்டாவது நினைவு நாள். இந்நாளில் அவர் நடித்த சில படங்களை நினைவு கூர்வோமா!

நினைவு நாளில் நினைவுக்கு வரும் சுஷாந்த் சிங்கின் சில திரைப்படங்கள்...!

Kai Po Che படத்தில் இஷான் பட்:
காய் போ சே படத்தின் மூலம் சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட்டில் அறிமுகமானாது. அவர் அந்தப் படத்தில் கனவுகள் நிறைவேறாத கிரிக்கெட்டராக நடித்திருப்பார். அவர் அந்தப் பாத்திரத்தில் கனகச்சிதமாகப் பொருந்தியிருப்பார்.

MS Dhoni: The Untold Story படத்தில் மகேந்திர சிங் தோனி:
முதல் படம் ஆசை நிறைவேறாத கிரிக்கெட்டர் என்றால் இரண்டாம் படத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான தோனியின் கதாபாத்திரம். பயோபிக் படத்தில் கிரிக்கெட் களத்திலும், காதல் களத்திலும் சுஷாந்த் சிங் ராஜ்புத் சென்சுரி அடித்தார். அதன்பின்னர் அவரை தோனியின் நிழலாகவே ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

Kedarnath படத்தில் மன்சூர் கான்:
2018ல் அபிஷேக் கபூர் இயக்கத்தில் வெளியானது கேதார்நாத் திரைப்படம். தோனி பட வெற்றி தந்த புகழ் பாலிவுட்டில் சுஷாந்தை ஜொலிக்கச் செய்திருந்தது. இந்நிலையில் கேதார்நாத் படத்தில் சாரா அலி கானுடன் ஜோடி சேர்ந்தார் சுஷாந்த் சிங். அந்தப் படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Chhichhore படத்தில் அனிருத் பதக்:
சிச்சோர் படத்தில் அனிருத் பதக் என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் நடித்திருப்பார். அதுதான் அவரது பெஸ்ட் எனக் கருதப்படுகிறது. அது ஒரு பீரியட் ஃபில்ம். 1990களில் நடப்பது போல் ஆரம்பித்து 2019ல் வந்து சேரும் கதை. ரசிகர்களை அது வெகுவாகக் கவர்ந்தது. உண்மையான நண்பர்களை போற்றும் படம்.

Dil Bechara படத்தில் மேனி
தில் பேச்சரா படத்தில் மேனி என்ற கதாபாத்திரத்தில் சுஷாந்த் நடித்திருப்பார். அறிமுக இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கிய படம் இது. ஆனால், சுஷாந்தின் மரணத்துக்குப் பின்னர் தான் இப்படம் வெளியானது. 2012ல் வெளியான ஜான் க்ரீனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது இப்படம். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக வாழ்வது எப்படி என நடித்துக் காட்டிவிட்டு தன் நிஜத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சுஷாந்த் குறுகிய காலமே திரையில் இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வெறும் ரூ.50 தான் டிக்கெட்.! சிறப்பம்சம் என்ன.?
கலக்கப்போகுது வின்டேஜ் பேருந்து.! ஒரு நாள் முழுக்க ஊர் சுற்ற வெறும் ரூ.50 தான் டிக்கெட்.! சிறப்பம்சம் என்ன.?
Embed widget