Shankar movie update: ஷங்கரின் அடுத்த பட உரிமைக்கு ஜீ ஸ்டூடியோஸ் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?
ஷங்கர் - ராம்சரண் இணையும் படத்தின் தியேட்டர், சேட்டிலைட் உள்ளிட்ட உரிமைகளை ஜீ ஸ்டூடியோஸ் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியை வைத்து 2.0 படம் இயக்கிய பிறகு ஷங்கர் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், கிரேன் விபத்தால் ஷங்கருக்கும், தயாரிக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் மீண்டும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. படத்தில் காஜலுக்கு பதில் த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த சமயத்தில் ஷங்கர் தெலுங்கின் முன்னணி நாயகனான ராம் சரண் தேஜாவை வைத்து படம் இயக்க ஒப்பந்தமானார். அதன்படி ராம்சரணை வைத்து அவர் ஷூட்டிங்கையும் தொடங்கினார். படத்திற்கு ராம்சரண் 15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். கதாநாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட சமீபத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்துவருகிறது.
இந்நிலையில் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படும் இப்படத்தின் படத்தின் தியேட்டர் உரிமை, தியேட்டர் வெளியீட்டுக்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமை ஆகியவைகளை மொத்தமாக ஜீ ஸ்டுடியோஸ் 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முழு படப்பிடிப்பும் இன்னும் நிறைவடையாத சூழலில் 350 கோடி ரூபாய்க்கு ஜீ ஸ்டுடியோஸ் படத்தின் உரிமைகளை வாங்கியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவலால் தெலுங்கு திரையுலகம் ஆச்சரியத்தில் இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: TN vs Karnataka: கடைசி பந்தில் சிக்சர்... தமிழ்நாடை காப்பாற்றிய ஷாரூக்கான்... தொடர்ந்து 2வது முறை சாம்பியன்!
kamal haasan Covid Positive: நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கலா?
லாக்கப்பில் காதலன்... விடுவிக்கக் கோரி கழுத்தை அறுத்த இளம் பெண்... சிதறிய போலீசார்!