மேலும் அறிய

Rashmika Mandana : கேப்டன் மில்லருடன் களமிறங்கும் ஸ்ரீவல்லி.. தனுஷ் படத்தில் ராஷ்மிகா..

தனுஷின் 51-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்பிருப்பதாக பேசப்பட்ட நிலையில் தற்போது இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு

சேகர் கம்முலா இயக்கும் தனுஷின் 51-வது படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தனுஷ்

கோலிவுட்டின் மிக பிஸியான ஒரு நடிகராக தனுஷ் இருந்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாம பாலிவுட், ஹாலிவுட் என அவ்வப்போது தனது சில படங்களில் என்ட்ரி கொடுத்தும் வருகிறார் தனுஷ். தற்போது அருண் மாதேஸ்வரன்  இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். அதே நேரத்தில் பாலிவுட் இயக்குநர் ஆனந்த்.எல். ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ என்கிற படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ். மற்றொரு புறம் இயக்கத்திலும் பிஸியாக இருக்கிறார்

டோலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்

இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் தெலுங்கு இயக்குநரான சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தப் படம் மூன்று மொழிகளில் வெளியிடப்பட இருப்பதாகவும் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகுக்குள் ஹீரோவாக தனுஷ் களமிறங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் முக்கியமான தகவல் ஒன்று தற்போது வெளியாக இருக்கிறது.

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்பதே இந்தத்  தகவல். ஏற்கெனவே வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா தற்போது முதல் முறையாக தனுஷுடன் இணைகிறாராம். மேலும் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் மிகப்பெரிய பட்ஜட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

டி 51

 பிரபல ஜாம்பவான் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு அதிபருமான திரு. நாராயண் தாஸ் கே. நாரங் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு தனுஷின் 51-வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேகர் கம்முலாவுடன் இந்தப்படத்திற்காக இணைய உள்ளார்.  

மிகப்பெரிய பட்ஜெட்

தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த #D51 படம், நாராயண் தாஸ் கே நாரங்கின் ஆசிகளுடன், சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா LLP (ஆசியன் குரூப்பின் ஒரு பிரிவு) மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் பல மொழிகளில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக இருக்கிறது. சோனாலி நாரங் இந்த படத்தை தயாரிக்கிறார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Embed widget