Rashmika Mandanna : இதெல்லாம் நடந்தது.. கேலி செய்த வம்சி - விஜய் சார்... வாரிசு பட அனுபவம் பகிர்ந்த ராஷ்மிகா!
தற்போது ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும், தெலுங்கு திரையுலகிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
![Rashmika Mandanna : இதெல்லாம் நடந்தது.. கேலி செய்த வம்சி - விஜய் சார்... வாரிசு பட அனுபவம் பகிர்ந்த ராஷ்மிகா! Rashmika latest tweet about the funny moments happened in varisu sets Rashmika Mandanna : இதெல்லாம் நடந்தது.. கேலி செய்த வம்சி - விஜய் சார்... வாரிசு பட அனுபவம் பகிர்ந்த ராஷ்மிகா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/363e464b80d7477b263cc481d9a5ce771679314242475224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
‘சுல்தான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இரண்டாவது படத்திலேயே விஜய் ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
![வாரிசு படப்பிடிப்பில் விஜய் - ராஷ்மிகா மந்தனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/20/d0403179b673ac079c17178c240331231679314293195224_original.jpg)
இந்தியிலும் கலக்கிய ராஷ்மிகா :
தற்போது ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டிலும், தெலுங்கு திரையுலகிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியில் குட் பை, மிஷன் மஜ்னு, அனிமல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும், புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
'வாரிசு' திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா பெரிய அளவில் தனது நடிப்புத் திறமையை நிரூபிக்க வாய்ப்புகள் இல்லை என்றாலும் அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் அவருக்கு ஜோடியாக இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் எனக் கூறப்பட்டது.
சுவாரஸ்யமான அனுபவம் :
இந்நிலையில், வாரிசு படப்பிடிப்பில் நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து ரசிகர் ஒருவர் நடிகை ராஷ்மிகாவிடம் முன்னதாக ட்விட்டர் தளத்தில் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நான் அங்கிருந்து வெளியேறிய பிறகு தன்னுடைய புகைப்படங்களை இயக்குனர் வம்சி எடுத்துக்கொண்டு போய் விஜய் சாரிடம் காட்டி கேலி செய்வார் என பதிலளித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த லேட்டஸ்ட் ட்வீட்க்கு அவரின் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.
புஷ்பா: தி ரூல் :
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமாரன் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றது 'புஷ்பா : தி ரைஸ்' திரைப்படம். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தில் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி, சுனில், ராவ் ரமேஷ், தனஞ்சயா, அனசுயா பரத்வாஜ், அஜய் மற்றும் அஜய் கோஷ் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சந்தனக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து புஷ்பா : தி ரூல் திரைப்படம் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புஷ்பா முதல் பாகத்தில் சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ராஷ்மிகா மந்தனா, தற்போது இரண்டாவது பாகத்திலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்துவார் என எதிர்பாக்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)