Ranveer Singh : ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸுடன் சேர்ந்து அட்டகாசம் செய்யும் ரன்வீர் சிங்... வைரலாகும் விளம்பரம்
ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ் இணைந்து நடித்துள்ள விளம்பரம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது
முன்னதாக டிவி சீரியல் பாணியில் விளம்பரம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது ரியாலிட்டி ஷோ பாணியில் புதிய விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.
ரன்வீர் சிங்
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரன்வீர் சிங். பாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் தீபிகா படூகோனை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். லூட்டேரா , குண்டே, பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா, பாம்பே டாக்கீஸ் , பத்மாவத், கல்லி பாய் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு ஆலியா பட் உடன் இணைந்து கரண் ஜோகர் இயக்கத்தில் இவர் நடித்த ராக்கி ஆர் ரானி கி பிரேம் கஹானி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. தற்போது சிங்கம் அகெயின் (singham again) படத்தில் நடித்து வருகிறார்.
ரன்வீர் சிங் - ஜானி சின்ஸ்
அதிர்ச்சி கொடுப்பது என்பது ரன்வீர் சிங்கிற்கு ஒரு பொழுதுபோக்கு. சினிமா நிகழ்ச்சிகளில் திடீரென்று மேடையில் குதிப்பது. நிர்வாணமாக புகைப்படங்கள் வெளியிடுவது என மாதத்திற்கு ஒருமுறை ஏதாவது சாகசம் செய்துகொண்டே இருப்பார். அப்படிதான் கடந்த ஆண்டும் பிரபல ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் நடித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார் .பெப்சி, சிங்ஸ், பிங்கோ!, நிவியா, ஜாக் & ஜோன்ஸ், ஜே.பி.எல், மாருதி சுஸுகி, கோல்கேட், லாயிட் மற்றும் கோடக், ஃபாஸ்டிராக் , மன்யாவர் , மிந்த்ரா ஆன்லைன் ஷாப்பிங் என பலவிதமான பிராண்டுகளை ப்ரோமோட் செய்யும் முகமாக இருந்து வரும் ரன்வீர் சிங் தற்போது போல்டு கேர் என்கிற ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கான பொருட்களை விற்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப் பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராக ரன்வீர் சிங் மாறியுள்ளதாக தெரிவித்தார். இதன் பகுதியாகவே ஜானி சின்ஸுடன் இணைந்து விளம்பரத்தில் நடித்து வருகிறார்.
Bold Care's ad with Ranveer Singh and Johnny Sins is pure dynamite! 🔥 #BoldCare #RanveerSingh pic.twitter.com/mo4DRZpyJY
— MR.BIHARI☮️✌️🇮🇳 (@LalitKarthik) April 3, 2024
சென்ற முறை டிவி சீரியல் பாணியில் விளம்பரம் ஒன்றில் நடித்த ரன்வீர் சிங் தற்போது ரியாலிட்டு ஷோ போல் மற்றொரு விளம்பரத்தில் நடித்துள்ளார். இதில் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லாத ஒருவராக ஜானி சின்ஸ் நடிக்க போல்டு கேர் விற்பனை பிரதிநிதியாக ரன்வீர் சிங்க் நடித்துள்ளார். இரட்டை அர்த்த வார்த்தைகள் , இந்தியில் பேசும் ஜானி சின்ஸ் என அட்டகாசம் செய்திருக்கிறார்கள் ரன்வீர் சிங் மற்றும் ஜானி சின்ஸ். இந்த விளம்பரத்தை ரசிகர்கள் பரவலாக ஷேர் செய்து வருகிறார்கள்.