மேலும் அறிய

Ram Charan Net worth : அடேங்கப்பா! வாயடைத்து போகவைக்கும் ராம் சரண் தனிப்பட்ட சொத்து மதிப்பு!

Ram Charan net worth : நடிகர் ராம் சரண் 39வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நிகர சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம்.  

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர் ராம் சரண் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்றைய தினத்தில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பார்க்கலாம். 

சர்வதேச செலிபிரிட்டி :

2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சிறுத்தை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும்  எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. அப்படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து ஆடிய 'நாட்டு நாட்டு...' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. அதன் மூலம் பவர் ஸ்டாராக இருந்த ராம் சரண் குளோபல் ஸ்டாராக பிரபலமானார். 

Ram Charan Net worth : அடேங்கப்பா! வாயடைத்து போகவைக்கும் ராம் சரண் தனிப்பட்ட சொத்து மதிப்பு!

தற்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து வருகிறார். ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் 'ஜரகண்டி' பாடலின் லிரிக் வீடியாவை படக்குழு வெளியிட்டனர். தற்போது இந்த பாடல் ட்ரெண்டிங்காகி வருகிறது. 

திருமண வாழ்க்கை :

ராம் சரணுக்கும் உபசனாவுக்கும் 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர் அப்போலோ மருத்துவமனையின் உரிமையாளரின் பேத்தியாவார். மேலும் அப்போலோ சாரிட்டியின் வைஸ் சேர்மேனாகவும் இருந்து வருகிறார் உபாசனா. இந்நிலையில் ராம் சரண்  சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் வாய் அடைக்க வைத்துள்ளது. 

ராம் சரண் சொத்து மதிப்பு :

ஜூப்லி ஹில்ஸின் காஸ்ட்லீயான காலனியில் 25000 சதுர அடியில், 40 கோடி மதிப்பிலான சொகுசு பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பங்களாவுக்கு உள்ளேயே ஜிம், நீச்சல் குளம் மற்றும் பல வசதிகள் உள்ளன என கூறப்படுகிறது. ஆர்ஆர்ஆர் படத்துக்காக 45 கோடி சம்பளமாக பெற்ற ராம் சரண் அதன் இமாலய வெற்றிக்கு பிறகு சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளார். கேம் சேஞ்சர் படத்துக்காக 100 கோடியாக உயர்த்தியவர் அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள படங்களுக்கு மேலும் சம்பளத்தை பல கோடிகள் உயர்த்தியுள்ளார் என கூறப்படுகிறது. 

நடிகராக மட்டுமின்றி அவர்களின் குடும்ப பெயரில் கொனிடேலா புரொடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். விளம்பரங்களில் நடித்து வருவதுடன் 34 பிராண்டுகளுக்கு பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார். மேலும் ரூட்ஜெட் என்று விமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் ராம் சரண். 

Ram Charan Net worth : அடேங்கப்பா! வாயடைத்து போகவைக்கும் ராம் சரண் தனிப்பட்ட சொத்து மதிப்பு!

சொகுசு கார்கள்:

ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் , மெர்சிடஸ் மேபேக் , ஃபெராரி போர்ட்டோஃபினோ மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் என பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை வைத்துள்ளார். இதில் ராம் சரண் தந்தை சிரஞ்சீவி மற்றும் மனைவி உபசனாவின் சொத்து மதிப்பை சேர்க்காமல் ராம் சரண் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டுமே 1300 கோடி  இருக்கும் என கூறப்படுகிறது. 

இந்த தகவல்களை கேட்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வாயடைத்து போய்விட்டனர்.

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget