Rakul Preet Singh : பிறந்த குழந்தையுடன் ரகுல் ப்ரீத் சிங்... DOCTOR G ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ...
டாக்டர் பாத்திமா சித்திக் கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள டாக்டர் ஜி திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில வேடிக்கையான தருணங்களை பகிர்ந்துள்ளார்.
மருத்துவ வளாகத்துக்கு உள்ளே நடக்கும் நகைச்சுவை கதையாக உருவாகியுள்ள பாலிவுட் திரைப்படம் "டாக்டர் ஜி". ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் அனுராக் காஷ்யப் சகோதரி அனுபூதி காஷ்யப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் மருத்துவர்களாக நடித்துள்ளார்கள். ஆயுஷ்மான் குரானா முதல் முறையாக ஒரு மருத்துவராக அதுவும் மகப்பேறு மருத்துவரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு எலும்பியல் நிபுணர் எப்படி மகப்பேறு மருத்துவராக மாறுகிறார் மற்றும் அந்த பயணத்தில் ஏற்படும் ஸ்வாரஸ்யமான நிகழ்வுகள் போராட்டங்கள் தான் டாக்டர் ஜி படத்தின் கதைக்களம். ஒரு கடுமையான விஷயத்தை நகைச்சுவையோடு கதையை நகர்த்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் டாக்டர் பாத்திமா சித்திக் கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஒரு டாக்டர் கதாபாத்திரத்தில் அவர் மிகவும் உற்சாகமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எடுத்துக்கொண்ட பல வேடிக்கையான தருணங்களை பதிவு செய்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
#Watch | @Rakulpreet shares her experience of working in #DoctorG, says, ‘I have never held such a newborn baby’https://t.co/uX2D3hhkRt
— Zee News English (@ZeeNewsEnglish) September 28, 2022
ஸ்பெஷல் மொமெண்ட்ஸ் :
இந்த படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்த நாள் முதல் இன்று வரை நான் மிகவும் சிறப்பான தருணமாக கருதுகிறேன். பிறந்த குழந்தை ஒன்றை கையில் வைத்திருக்கும் அனுபவம் மிகவும் புதியது. இதுவரையில் நான் இதை அனுபவித்ததே இல்லை. சில படங்கள் மட்டுமே நமது இதயத்தோடு ஒன்றிவிடும். டாக்டர் ஜி திரைப்படமும் அதுபோல ஒன்று தான். என மிகவும் அழகான ஒரு பதிவை படப்பிடிப்பு தளத்தில் இருந்து நம்முடன் பகிர்ந்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங். இது ஒரு கம்ப்ளீட் காமெடி ஜனார் என்பதால் நிச்சயம் ரசிகர்களை எளிதில் போய் சேரும்.
Dr. Fatima Siddiqui ( @rakulpreet ) i need a quick appointment my heart is actually missing since its currently in scotland😩 pls do the needful treatment! Its an emergency ‼️‼️#DoctorG #RakulPreetSingh #AyushmannKhurrana @Rakulpreet @ayushmannk pic.twitter.com/G27GoLZLpe
— Rakul X Magic (@RakulxMagic) September 28, 2022