Rakul Preet | ”இது வெறும் ஆரம்பம்தான்“ : பாலிவுட்டில் அதிரடி காட்டும் ரகுல் பிரீத் சிங்!
ரகுல் பிரீத் சிங் தன்னை விட இரு மடங்கு வயதில் மூத்த நடிகர் ஒருவரை காதலிப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது
தமிழ் , தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, சூர்யாவுடன் எல்கேஜி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 மற்றும் சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் தன்னை விட இரு மடங்கு வயதில் மூத்த நடிகர் ஒருவரை காதலிப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பதிலளித்திருந்த ரகுல் ,” என்னை பாலிவுட் மற்றும் டோலிவுட் நடிகர்களுடன் இணைத்து சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதற்கு நான் பதிலளிப்பதில்லை. நான் யாரிடமும் காதலில் விழவில்லை. இது போன்ற வதந்திகளை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டால் அவர்களே அதை மறந்து விடுவார்கள், மேலும் இப்போது என்னை குறித்த வதந்திகள் வருவது ஓய்ந்திருக்கிறது. இது எனக்கு நிம்மதி அளிக்கிறது” என தெரிவித்திருந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், ஃபிட்னஸ் குறித்த விழிப்புணர்வையும் முன்னெடுத்து வருகிறார்.
தற்போது பாக்ஸிங். ஃபிட்னஸ் என களமிறங்கியுள்ள ரகுல் பிரீத் சிங் தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கே அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். தற்போது அமிதா பச்சன், அஜய் தேவ்கன் ,ஆப்ரகாம், ஆயுஷ்மான் குரானா என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த ரகுல் பிரீத் சிங் ”இவை அனைத்தும் முடித்திருக்க வேண்டிய படங்கள் , கொரோனா ஊரடங்கு காரணமாக இப்போது நடித்துக்கொண்டிருக்கிறேன், ஊரடங்கால் ஒரு போதும் என் வேகத்தை குறைக்க முடியாது. ரசிகர்களின் அன்பிற்கு என்றும் நான் நன்றி உள்ளவளாக இருப்பேன். என்னை நிரூபிக்க இன்னும் நிறைய படங்கள் நடிக்க வேண்டியுள்ளது. இது வெறும் ஆரம்பம்தான் “ என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
முன்னதாக ஒடிடி தளங்களில் படங்கள் வெளியிடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த ரகுல் பிரீத் சிங் , நல்ல கதை மற்றும் நல்ல நடிப்பு ஆகியவற்றை ரசிகர்கள் எங்கிருந்தாலும் ஆதரிக்கின்றனர். கொரோனா காலக்கட்டத்தின் ஒடிடி சினிமாத்துறைக்கு கிடைத்த ஒரு வரம். ஆனாலும் தியேட்டரில் விசில் அடித்து படம் பார்ப்பதற்கு ஈடாகாது. சினிமா துறை வளர வளர ஒடிடியும் வளர்ந்தால் அது ஆயோக்யமான விஷயம்தான்“ என ஒடிடியை ஆதரித்துள்ளார்.