Rakhi Sawant : டைவர்ஸ் பார்ட்டி கேள்விப்பட்டு இருக்கீங்களா? மேளதாளத்துடன் ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம் ராக்கி சாவந்த்..
பிக் பாஸ் பிரபலம் ராக்கி சாவந்த், விவாகரத்து பெற்றதை அடுத்து மேளதாளத்துடன் நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
![Rakhi Sawant : டைவர்ஸ் பார்ட்டி கேள்விப்பட்டு இருக்கீங்களா? மேளதாளத்துடன் ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம் ராக்கி சாவந்த்.. Rakhi Sawant celebrates divorce party wearing bridal lehenga Rakhi Sawant : டைவர்ஸ் பார்ட்டி கேள்விப்பட்டு இருக்கீங்களா? மேளதாளத்துடன் ஆட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம் ராக்கி சாவந்த்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/3be5a660934cb181f31e74de08c98ef71687432164047224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலிவுட்டின் சர்ச்சை குயின், கவர்ச்சி பாம் ராக்கி சாவந்த் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். என் சகியே, முத்திரை, கம்பீரம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடிய இந்த கவர்ச்சி சூறாவளிக்கு சோசியல் மீடியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் ஆதில் துரானியை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், நிர்வாண வீடியோவை விற்று பண பெற்றதாகவும், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து இருப்பதாகவும், தன்னுடைய அனுமதியின்றி வங்கியில் இருந்து பணத்தை எடுத்து விட்டார் என்றும் அடுக்கடுக்கான குற்றங்களை சொல்லி கணவர் மீது போலீசில் புகார் அளித்து இருந்தார் ராக்கி சாவந்த். புகாரின் பேரில் அதில் துரானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதே காரணங்களுக்காக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
ராக்கி சாவந்த் விவாகரத்து வழக்கிற்கு நேற்று தீர்ப்பு வழங்கக்கப்பட்டு அவருக்கு விவாகரத்தை வழங்கியது நீதிமன்றம். தனக்கு விவாகரத்து கிடைத்த மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல் மணப்பெண் கோலத்தில் நடுரோட்டில் மேளதாளத்துடன் செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் ராக்கி சாவந்த். அவரின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ராக்கி சாவந்த் போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'முள்ளும் மலரும்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷாலினி, காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் ரியாஸிடம் இருந்து விவாகரத்து பெற்றதை போட்டோஷூட் மூலமாக தெரிவித்து உள்ளார். ஏற்கனவே தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், ஒரு சைக்கோவைபோல நடந்து கொள்கிறார் என்றும் ஒரு வீடியோ மூலம் வெளியிட்டு இருந்தார். கசப்பான அனுபவங்களுடன் வாழ்ந்து வந்த ஷாலினி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதை மிகவும் சந்தோஷமாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது.
விவாகரத்து என்பது அதிகமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல காரணங்களுக்காக கணவனால் பல கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். துணிச்சலான சில பெண்கள் விவாகரத்து மூலம் தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தின் வெளிப்பாடாக இப்படி கொண்டாடுகிறார்கள். பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்தை தொடர்ந்து சீரியல் நடிகை ஷாலினி இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)