(Source: ECI/ABP News/ABP Majha)
Vettaiyan Highlights : தெறிக்கும் அனிருத் இசை , மாஸான ரஜினி இன்ட்ரோ.... வேட்டையன் படத்தில் இன்னும் என்ன ஸ்பெஷல்?
ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் இப்படத்தின் பிளஸ் என ரசிகர்கள் எதை எல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என பார்க்கலாம்
வேட்டையன் விமர்சனம்
ரஜினிகாந்த் நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன் , மஞ்சு வாரியர் , ஃபகத் ஃபாசில் , ரித்திகா சிங் , துஷாரா விஜயன் , ரானா டகுபடி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில் இப்படத்தின் ஹைலைட்ஸ் என ரசிகர்கள் எதை சொல்லி இருக்கிறார்கள் என பார்க்கலாம்.
ரஜினி இன்ட்ரோ
வேட்டையன் படத்தின் முதல் 20 நிமிடங்கள் முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்கு ஒரு விருந்து. குறிப்பாக ரஜினியின் அறிமுக காட்சியும் ராக்ஸ்டார் அனிருத்தின் பின்னணி இசையும் சமீபத்தில் வந்த சிறந்த அறிமுக காட்சிகளில் ஒன்று என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அனிருத் பின்னணி இசை
சமீப காலங்களில் ரஜினி படம் என்றாலே அனிருத் தவிர்க்க முடியாத ஒருவராக ஆகிவிட்டார். பேட்ட , தர்பார் , ஜெயிலர் ஆகிய படங்களில் தெறிக்கவிடும் பாடல்களையும் பின்னணி இசையை வழங்கி இருந்தார். அந்த வகையில் தற்போது வேட்டையன் படத்திலும் அனிருத் சிறப்பான சம்பவம் செய்துள்ளார். ரஜினி திரையில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் அனிருத் தனது இசையால் பல மடங்கு பில்டப் கொடுத்திருக்கிறாராம். ரஜினியின் இன்ட்ரோ காட்சிக்கு மட்டும் ஸ்பெஷலாக ஒரு பிஜிஎம் அனிருத் உருவாக்கி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஃபகத் ஃபாசில் ரஜினி காம்போ
வேட்டையன் படத்தில் நடித்திருக்கும் பல முக்கியமான நடிகர்கள் ஃபகத் ஃபாசிலும் ஒருவர். ரஜினி மற்றும் ஃபகத் ஃபாசில் சேர்ந்து நடித்துள்ள காட்சிகள் நகைச்சுவையாக ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாகவும் விமர்சனங்களில் குறிப்பிடப் பட்டு வருகிறது.
மெசேஜ்
ரஜினி படத்தில் எல்லாம் யார் மெசேட் எதிர்பார்க்கப் போகிறார்கள் என்பது பொதுப்புரிதல். ஆனால் ஒரு நல்ல மெசேஜை மாஸான தருணங்களுடன் சொல்ல முடியும் என வேட்டையன் படம் காட்டியிருக்கிறது. ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும் அதே நேரத்தில் தான் சொல்ல வந்த கருத்தை முழுதாக இயக்குநர் ஞானவேல் சொல்லியிருக்கிறார் என சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிற நடிகர்கள்
இவை எல்லாம் தவிர்த்து படத்தில் அமிதாப் பச்சன் , துஷாரா விஜயன் , ரித்திகா சிங் ஆகியவர்களின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கின்றன.