Thalaivar 171 Title Reveal: தெறிக்கவிடப்போகும் அனிருத் பிஜிஎம்.. ரஜினியின் 171-வது பட டைட்டில் இதுவா?
எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் ஆகிய படங்களை தொடர்ந்து 6வது முறையாக ரஜினி நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171 வது படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த், கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 90 சதவிகிதம் முடிவடைந்து விட்டது. இப்படியான நிலையில் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைய உள்ளார்.
எந்திரன், பேட்ட, தர்பார், அண்ணாத்த, ஜெயிலர் ஆகிய படங்களை தொடர்ந்து 6வது முறையாக ரஜினி நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.இந்த படத்துக்கான முன்னோட்ட பணிகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. லியோ படத்துக்குப் பின் லோகேஷின் அடுத்தப்படம் ரஜினியுடன் என்றதுமே கோலிவுட்டில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. இந்த படம் அவரின் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் கீழ் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அனிருத் இசையமைக்கும் ரஜினியின் 171வது படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டது. அன்று முதல் ஒரே திருவிழாகோலம் தான் ரஜினி ரசிகர்களிடையே உள்ளது. இந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு விதமான வாட்ச்களை கைவிலங்காக ரஜினி மாட்டிக்கொண்டு இருக்கும் போஸ்டர்களும் வெளியாகி டைட்டில் என்னவாக இருக்கும் என யோசிக்க வைத்துள்ளது.
இதனிடையே சினிமா வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி, “டைட்டில் ப்ரோமோ 45 வினாடிகள் இருக்கும் எனவும், இதில் அனிருத் போட்டிருக்கும் பிஜிஎம் தாறுமாறாக இருக்கும்” என கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் “ரோலக்ஸ்” எனவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்றைய தினம் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் D.I.S.C.O என்ற வார்த்தையையும் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டார். அப்படியென்றால் விஜய் படம் The Greatest of All Time பட டைட்டில் சுருக்கமாக G.O.A.T என அழைக்கப்படுகிறது.
அப்படியான ஒரு வார்த்தை தான் டைட்டிலாக இருக்குமா எனவும் குழப்பம் எழுந்துள்ளது. எது எப்படியோ ரஜினி ரசிகர்களுக்கு இன்றைய நாள் விருந்து தான். சமூக வலைத்தளங்களை தெறிக்க விட காத்திருக்கிறார்கள். #Thalaivar171TitleReveal, #LokeshKanagaraj ஆகிய ஹேஸ்டேக்குகளும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.