மேலும் அறிய

Jailer :நாளை ரிலீசாகும் ஜெயிலர்... அமெரிக்காவில் ரஜினிக்கு ப்ளக்ஸ் வைத்த ரசிகர்கள்

நாளை ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் ரஜினியின் ரசிகர்கள் அவருக்கு ப்ளக்ஸ் வைத்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நாளை (ஆகஸ்ட் 10) வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில்  தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் அவருக்கு கட் அவுட் வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ டிவிட்டரில் வெளியாகி உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு பயணிப்பது வழக்கம். உடல்நலக்குறைவு காரணமாக 2010ம் ஆண்டுக்கு பிறகு இமயமலை பயணத்தை அவர் தவிர்த்து வந்தார். 2018-ஆம் ஆண்டில் ‘காலா’, ‘2.0’ படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு சென்றார். அதன்பிறகு கொரோனா சூழல் காரணமாக பயணத்தை தவிர்த்து வந்தார். இதனிடையே ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

இமயமலை புறப்பட்டார் ரஜினி

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்பட்டார். இன்று காலை 8 மணி அளவில் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், கொரோனா காரணமாக இமயமலை செல்ல முடியாமல் இருந்தது. தற்போது 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலைக்கு செல்கிறேன்’ என்றார். ஜெயிலர் திரைப்படம் எப்படி உள்ளது? படத்தில் நடித்ததில் உங்கள் அனுபவம் எப்படி உள்ளது? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ரஜினி, படத்தை நீங்கள் பார்த்துவிட்டு கூறுங்கள்’ என்றார்.

ரஜினிகாந்த் சென்னையில் இருந்து விமானத்தில் பெங்களூரு சென்றார். பெங்களூரில் இருந்து அவர் இமயமலைக்கு பயணமாகிறார். ரஜினிகாந்த் தனது இமயமலை சுற்றுப்பயணத்தின் போது சித்தர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சிவகார்த்திகேயன் வீடியோ வெளியீடு

ஒட்டுமொத்த திரையுலகமும் ஜெயிலர் பட ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருக்கும் வணக்கம். காஷ்மீரில் என் படத்தோட ஷூட்டிங் இரவு, பகலா போய்கிட்டு இருக்கதால இந்த வீடியோ தாமதமாக வெளியிடுறேன். மாவீரன் படம் வெற்றிகரமாக 25வது கடந்து ஓடிகிட்டு இருக்கு. இவ்வளவு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி, பாராட்டு தெரிவித்த அனைத்து பிரபலங்களின் ரசிகர்கள், அனைத்து மாநில ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் என் ரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாவீரன் படம் பார்த்துவிட்டு வாழ்த்து தெரிவித்தார். இது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் உற்சாகமாக இருந்தது. குறிப்பாக எனக்கு ரொம்ப ஸ்பெஷலா இருந்துச்சு. என்கிட்ட ரஜினி, “சிவா ரொம்ப சிறப்பா இருந்துச்சு. நீங்க சிறப்பா நடிச்சிருந்தீங்க. கதை வித்தியாசமா இருந்துச்சு. நீங்களும் வித்தியாசமா தான் கதை பிடிக்கிறீங்கல” என சொன்னார். எனக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருந்துச்சு. ரொம்ப நன்றி தலைவா".  இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
TVK Vijay: விஜய் மெர்சல் காட்டப்போகும் தொகுதி இதுவா? தளபதி போடும் ஸ்கெட்ச் இதுதான்!
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Voter List : திருத்தனுமா? மாத்தனுமா? நாளை தொடங்குது வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Breaking News LIVE 15th Nov 2024: நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் எகிறிய தங்கம் விலை
Breaking News LIVE 15th Nov 2024: நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் எகிறிய தங்கம் விலை
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Embed widget