மேலும் அறிய

Raj Kundra: ஆபாச பட விவகாரம்..விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த போலீஸ்..வழக்கறிஞர் கூறுவது என்ன?

Raj Kundra: பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கனவர் ராஜ் குந்த்ராவின் ஆபாச பட வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து அவரது வழக்கறிஞர் சில கருத்துகளை கூறியுள்ளார்.

பாலிவுட் உலகில் உள்ள திறமை மிகு நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவர், கடந்த 2009ஆம் ஆண்டு, ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் முடித்தார். இவர்களுக்கு, வியான், டிலீனா மற்றும் சமீஷா என மூன்று குழந்தைகள் உள்ளனர். ஷில்பா ஷெட்டியின் கணவர், ராஜ் குந்த்ரா கடந்த ஆண்டில் ஆபாச பட வழக்கு ஒன்றில் சிக்கினார்.

ஆபாச பட வழக்கு:

Raj Kundra: ஆபாச பட விவகாரம்..விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த போலீஸ்..வழக்கறிஞர் கூறுவது என்ன?

ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா 5 ஸ்டார் ஹோட்டல்களில், ஆபாச படம் எடுத்து ஓடிடி தளங்களில் வெளியிட்டதாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து, அப்படத்தில் நடித்த இரண்டு மாடல் அழகிகள், படத்தின் தயாரிப்பாளர் மீடா மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜூ டூபே ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜ் குந்த்ரா, இரண்டு மாதங்கள் காவல் துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டார். இது குறித்த வழக்கு பல நாட்களாக நடந்து வருகிறது.

மீண்டும் விஸ்வரூபம் எடுத்த வழக்கு:

சிறிது நாட்கள் பெரிதாக பேசப்படாமல் இருந்த ராஜ் குந்த்ராவின் வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, மஹாராஷ்ட்ரா காவல் துறையினர், ராஜ் குந்த்ராவின் மீது, 450 பக்க விசாரனை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதனால், பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. 

ராஜ் குந்த்ராவின் வழக்கறிஞர் பிரசாந்த் படேல் இந்த வழக்கு குறித்து பேசுகையில், “மும்பை சைபர் க்ரைம் போலீஸார் 450 பக்க வழக்கு விசாரணை அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இந்த விசாரணை அறிக்கை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எனது கட்சிக்காரரின் மேல் எவ்வித குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும், அதை எதிர் கொள்வோம். ராஜ் குந்த்ரா எவ்வித தவறையும் இழைக்காதவர். ராஜ் குந்த்ராவிற்கு, நீதிமன்றத்தை நாடி தகுந்த நீதியைப் பெற எல்லா உரிமையும் உள்ளது” என்று கூறியுள்ளார். ராஜ் குந்த்ராவின் இந்த வழக்கு விசாரணையை எதிர்நோக்கி பலர் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கினறனர். 

ஷில்பா ஷெட்டியின் வைரல் வீடியோ!

ஷில்பா ஷெட்டி திருமண நாளுக்கென்று, ஸ்பெஷலாக, நடிகை ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

View this post on Instagram
 
A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

ராஜ் குந்த்ராவின் வழக்கு விசாரணையினால், ஷில்பாவிற்கு சற்று மனகசப்பு உண்டானது. இந்த தொழிலை தன் கணவர் செய்வதை ஷில்பா இழிவாக கருதினார். ஷில்பா, ராஜ் குந்தராவை விவாகரத்து செய்துவிடுவார் என்ற பேச்சுக்களும் மீடியா வட்டாரத்தில் நிலவி வந்தது. ஆபாச வழக்கினால்,இந்த இரு காதல் பறவைகளுக்கு இடையே சற்று பிளவு ஏற்பட்டது. சமீபகாலத்தில் அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினைகள் தீர்ந்துள்ளது. இன்றுடன், தனது 13 ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி அவரது கணவர் ராஜ் குந்தராவிற்கு தனது திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து அதற்கு கேப்ஷனாக, “13 ஆண்டுகள், குக்கீ.. ஐயோ! இந்த வாழ்நாளில் என்னுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்துகொண்டு அதை மிகவும் அழகாக மாற்றியதற்கு நன்றி. நீ..நான்..நாங்கள் அவ்வளவுதான் எனக்கு தேவை. “ என்று பதிவிட்டுள்ளார்.இது தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா.. கடைசி நேரத்தில் கலக்கும் இங்கிலாந்து!
IND vs ENG Semi Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா.. கடைசி நேரத்தில் கலக்கும் இங்கிலாந்து!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா.. கடைசி நேரத்தில் கலக்கும் இங்கிலாந்து!
IND vs ENG Semi Final LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் இந்தியா.. கடைசி நேரத்தில் கலக்கும் இங்கிலாந்து!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget