![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Manjima Gautham Marriage: சென்னையில் திருமணம்.. இதுதான் மஞ்சிமா- கௌதம் திருமண அழைப்பிதழ்.. ரைசா பகிர்ந்த கிளிம்ப்ஸ்!
மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக் திருமணம் நவம்பர் 28ம் தேதி சென்னையில் நடைபெறஉள்ளது. அவர்களின் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஹேண்ட்மேட் அழைப்பிதழின் கிளிம்ப்ஸ் ஒன்றை பகிர்ந்து பாராட்டியுள்ளார் நடிகை ரைசா.
![Manjima Gautham Marriage: சென்னையில் திருமணம்.. இதுதான் மஞ்சிமா- கௌதம் திருமண அழைப்பிதழ்.. ரைசா பகிர்ந்த கிளிம்ப்ஸ்! Raiza wilson has shared a glipmse of handmade invite of manjima mohan and gautham karthik Manjima Gautham Marriage: சென்னையில் திருமணம்.. இதுதான் மஞ்சிமா- கௌதம் திருமண அழைப்பிதழ்.. ரைசா பகிர்ந்த கிளிம்ப்ஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/87f93fa7a1641afc64b762e2cb3299ee1668682770078224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த மஞ்சிமா மோகன் 2019ம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளியான 'தேவராட்டம்' திரைப்படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்திருந்தார்.
காதலை உறுதிப்படுத்திய மஞ்சிமா - கௌதம் கார்த்திக் :
அப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இருந்தே இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இருவரும் வெளிப்படையாகவே பல நிகழ்ச்சிகள், பொது இடங்களில் இணைந்து காணப்பட்டாலும் வெளிப்படையாக தங்களின் காதலை தெரிவித்து கொள்ளாமல் இருந்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தான் இருவரும் தங்களின் காதலை வெளிப்படையாக வெளியுலகிற்கு அறிவித்தனர்.
கைவினை அழைப்பிதழ் :
அந்த வகையில் நடிகை மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருக்கும் வரும் நவம்பர் 28ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் திருமணம் குறித்த எந்த ஒரு அறிவிப்பையோ தகவல்களையோ வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் தங்களின் திருமணத்திற்கு கையால் செய்யப்பட்ட திருமண அழைப்பிதழை கொண்டு அனைவரையும் வரவேற்கிறார்கள்.
View this post on Instagram
ரைசா பகிர்ந்த கிளிம்ப்ஸ் : இந்த கையால் செய்யப்பட்ட அழைப்பிதழ்களில் எம்ப்ராய்டரி செய்யப்பட்டள்ள போட்டோ ஒன்றை பகிர்ந்த ரைசா வில்சன், "ஹேண்ட்மேட் அழைக்கிறது. இது அத்தனை அழகாக உள்ளது. உடனடியாக ஊட்டிக்கு நினைவுகளை கொண்டு சென்றது. நம்முடைய பாரம்பரியத்தை உயிருடன் வைத்திருக்க இது ஒரு அழகான வழி. இதன் மூலம் உங்கள் மேல் உள்ள மரியாதை அதிகரிக்கிறது" எனும் ஒரு அழகிய குறிப்பை பதிவிட்டு கிளிம்ப்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார் நடிகை ரைசா வில்சன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)