மேலும் அறிய

26 ஆண்டுகள் திரைப்பயணத்தை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு !

= இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் (post-production) வேகமாக நடைபெற்று வருகின்றன. “33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த டேக் லைனுடன் உருவாகும் இந்தப் படம், அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB Mohan Pictures நிறுவனத்தின் சார்பில் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா  இணைந்து தயாரிக்கிறார்.

பூரி ஜெகன்நாத்  தனது இயக்குநர் பயணத்தை பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த “பத்ரி” படத்தின் மூலம் தொடங்கினார். அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்போது 26 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

இந்த சிறப்பு தருணத்தில், விஜய் சேதுபதி சமூக வலைதளத்தில் தனது இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்துள்ளார்:

“இந்த மனிதரின் பயணம் எவ்வளவு அற்புதமானது 26 ஆண்டுகள் என்பது ஒரு மைல்கல் மட்டுமல்ல; தைரியம், நம்பிக்கை, மற்றும் அச்சமற்ற குரல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மரபு.

அன்புள்ள பூரி சார், #ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு படத்தில் உங்களுடன் வேலை செய்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. நடிகர்களாக நாங்கள் எப்போதும் எங்களை நம்பி, எங்களது கம்ஃபர்ட் ஜோனை தாண்டி தள்ளும் இயக்குநர்களை தேடுகிறோம்; நீங்கள் அதை மிகவும் எளிதாக செய்கிறீர்கள்.

இந்த படம் நிச்சயம் எங்களுக்கெல்லாம் ஒரு மிகவும் சிறப்பான படமாக நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். உங்கள் பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகள். என்றும் அன்புடன் ” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சம்யுக்தா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, தபு மற்றும் துனியா விஜய் குமார் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும் பிரம்ஹாஜீ மற்றும் VTV கணேஷ் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் போன்ற படங்களில் துடிப்பான இசையமைப்பை வழங்கிய தேசிய விருது பெற்ற ஹர்ஷவர்தன் ராமேஷ்வர், “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” படத்திற்கு இசையமைக்கிறார்.

“ஸ்லம் டாக்” படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. தமிழ்நாடு தேர்தல் முடிந்த பின் படத்தின் புரமோஷன் பணிகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

நடிப்பு: விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்   : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects
CEO : விஷு ரெட்டி
இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget