Kalki 2898: நெகட்டிவ் இல்லாம பாசிட்டிவ் இல்லை... வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தது ஏன்...‘ப்ராஜக்ட் கே’ பற்றி கமல்ஹாசன் பளிச்!
பிரபாஸ் நடிக்கும் ’கல்கி 2898’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்த காரணத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன்!
‘ப்ராஜக்ட் கே’ படத்தின் தலைப்பு மற்றும் படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
ப்ராஜக்ட் கே (எ) கல்கி 2898
‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நீண்ட நாள்களுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம் ‘ப்ராஜக்ட் கே’ எனப்படும் ‘கல்கி 2898 ஏடி’.
நட்சத்திரக் கூட்டம்
பிரபாஸ் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் ராணா, பசுபதி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மற்றுமொரு சிறப்பு உலக நாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருப்பதே!
அமெரிக்காவில் வெளியிடப்பட்ட டீசர்
இப்படத்தின் டீசர் வெளியீடு சாண்டியாகோவின் பிரபல ‘காமிக் கான்’ நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி நேற்று நடிகர்கள் கமல்ஹாசன், பிரபாஸ், ராணா, இயக்குநர் நாக் அஸ்வின் என படக்குழுவினர் அமெரிக்கா சென்று இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் நேற்று நள்ளிரவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபல ஹாலிவுட் படங்களான ஸ்டார் வார்ஸ், டியூன், அயர்ன் மேன் என பல படங்களை நினைவூட்டும்படி இருந்தாலும், இந்த டீசர் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ‘காமிக் கான்’ நிகழ்வில் நேரில் கலந்துகொள்ள முடியாத நடிகர் அமிதாப், காணொளி வழியாகக் கலந்துகொண்டு உரையாடினார். நிகழ்வில் கலந்துகொண்ட கமல்ஹாசன் தான் இந்தப் படத்தில் வில்லனாக நடித்ததற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
ஏன் வில்லனாக நடிக்க சம்மதித்தேன்
Ulaganayagan @ikamalhaasan on why he chose to be a part of #ProjectK
— Ramesh Bala (@rameshlaus) July 21, 2023
"The reason I accepted this film is because I come from analogous cinema. Without a negative, there's no positive. So, a negative role is an important role in a film" 💥#KamalHaasan #Prabhas #Kalki2898AD pic.twitter.com/KZtm9aJyF6
கல்கி 2898 படத்தில் வில்லனாக நடிப்பதற்காக கிட்டதட்ட 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் கமல்ஹாசன். மேலும் இந்தப் படத்தில் தான் ஏன் வில்லனாக நடிக்க சம்மதித்தார் என்பதன் காரணமாக இப்படி கூறியிருக்கிறார் “நான் டிஜிட்டலுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்து வந்தவன். எந்த ஒரு படமாக இருந்தாலும் நெகட்டிவ் இருந்தால்தான் பாஸிட்டிவ் இருக்க முடியும்.
அதனால்தான் நெகட்டிவ் கதாபாத்திரத்தின் நடிக்க சம்மதித்தேன்" என்று வழக்கமான தனது ஸ்டைலில் கூறியுள்ளார் கமல். டீசர் வெளியாகி இருந்தாலும் அதில் கமலை ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் டீசரில் கமல் இல்லாததைப் பார்த்து இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இந்தக் கேள்விக்கான பதிலாக படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் கமல் டீசர் முழுவதும் இருப்பதாகவும் ஆனால் நம் கண்களுக்கு தெரிய மாட்டார் என்றுm பதிலளித்துள்ளார்.
மேலும் படிக்க : Oppenheimer Review: நொடிக்கு நொடி பதட்டம்... வரலாற்றை கண்முன் நிறுத்தும் காட்சிகள்... கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ ஒரு திரைக்காவியம்!