மேலும் அறிய

"பணம் அதிகம் சேர்ப்போர் கொடுமையை தட்டிக் கேட்க மாட்டார்கள்..விஜய் கோடீசுவரர்" - தயாரிப்பாளர் ராஜன் பேச்சு

நடிகர் விஜய் குறித்தும், காயத்ரி ரகுராம் குறித்தும், முதல்வர் ஸ்டாலின் குறித்தும் காரசாரமாக 'இரண்டாயிரம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ராஜன் பேச்சு

ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன், "மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால்  சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணிநேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில்  படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்த படத்திற்கு பிறகு  மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை... விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம்." என்று நடிகர் விஜயை சரமாரியாக சாடினார்.

மேலும் அம்பேத்கரை காட்டக்கூடாது என்று தணிக்கை குழு கூறியதை சுட்டிக்காட்டி, "நீதிமன்றக் காட்சியில் அம்பேத்கர் படத்தை பயன்படுத்தக்கூடாது என்று தணிக்கை குழு கூறியதாக இயக்குநர் கூறினார். திருமாவளவன், சீமான் , வேல்முருகனிடம் இதுபற்றி கூறி போராட்டம் நடத்த வேண்டும். திரைப்படங்களில் தவறான வார்த்தைகளையே அனுமதிப்பவர்கள் திருவள்ளுவர் குறித்து படத்தில் காட்டக் கூடாது என்று கூறுவது சரியா..? அக்கிரமம் செய்கிறார்கள் மோடி அவர்களே, இப்படியே சென்றால் தாமரையில் ஒரு இலை கூட மலராது, டிமானிடைசேஷனால் லைனில் நின்று 65 சாதாரண மக்கள் இறந்துபோனார்களே, பணம் கொழித்தவர்கள் எந்த லைனில் நின்றார்கள், அதன் பிறகு ஜிஎஸ்டி, மருந்துக்கு, இட்லிக்கு எல்லாத்துக்கும் ஜிஎஸ்டி, இதைதான் படத்தில் கூறியிருக்கிறார் இயக்குனர் ருத்ரன்" என்று கூறினார். 

மேலும் தணிக்கை குழுவில் சமீபத்தில் நிகழ்ந்த கெடுபிடிகள் குறித்து, "பாஜக திரைத்துறையினருக்கு எதிராக சட்டங்களை திருத்தி அக்கிரமம் செய்து வருகிறது. காயத்ரி ரகுராம் போல தெருவில் திரிந்த பலருக்கு சினிமாக்காரர்கள் என்பதாலேயே பாஜகவில்  பொறுப்பு தந்தார்கள்… அது இப்போது வள்.. வள் என குரைக்க துவங்கியுள்ளது” என்றார். நீட் தேர்வு தொடர்பான சர்ச்சைகள் பல நிகழ்ந்துவரும் இந்நேரத்தில், முதல்வர் ஸ்டாலின் நீட்டை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் பேசினார், "நீட் விசயத்தில் ஸ்டாலினின் நெஞ்சுரத்தை வங்கத்து சிங்கமான மம்தாவே பாராட்டுகிறார், தைரிமாக பல முடிவுகளை எடுத்து வருகிறார்" என்று கூறினார்.

 

வீடியோவை முழுமையாய் காண இங்கு கிளிக் செய்யவும்.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget