மேலும் அறிய

Actor Vijay: 'டிக்கெட் விலையை குறைக்க முடியல.. அரசியலுக்கு வந்து என்ன பண்ணப் போறீங்க?’ - விஜய்யை விமர்சித்த தயாரிப்பாளர் கே.ராஜன்

கடத்தல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

கடத்தல் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

கடத்தல் படம் 

கரண், வடிவேலு, நடித்த 'காத்தவராயன்', கதிர், ஹனி ரோஸ் நடித்த ‘காந்தர்வன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலங்கை துரை அடுத்ததாக உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ‘கடத்தல்’ படத்தை எடுத்துள்ளார். இதில் ஹீரோவாக எம்.ஆர்.தாமோதர் அறிமுகமாகும் நிலையில், ஹீரோயின்களாக விதிஷா, ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சுதா, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாசலம், க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் என பல நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

இதில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்தார். அவர் தனது உரையில், “கடத்தல் படத்தை வாழ்த்த வந்திருக்கிற அனைவருக்கும் வணக்கம். இந்த படம் நல்ல வெற்றிப்படமாக அமைய வேண்டும். இதற்கு இறைவன் அருள் இருப்பதை விட, மக்களின் ஆசி இருக்க வேண்டும். அவர்கள் தியேட்டர்களை நோக்கி வர வேண்டும். படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது. அதனால் இப்படம் வெற்றி பெறும் என நம்பிக்கை உள்ளது” என கூறினார். 

நாம் எல்லாம் சாதிக்க பிறந்தவர்கள்

மேலும், ”நாம் எல்லாம் சாதிக்க பிறந்தவர்கள். நமக்கு எந்த பேதமும் வேண்டாம். இயக்குநர் பேரரசு பேசும்போது, சாதிய பிரச்சினைப் பற்றி பேசினார். சாதி உறவை வீட்டுக்குள் வைத்துக் கொள்வோம். வெளியே தமிழனாய் வாழ்வோம், இந்தியனாய் வளர்வோம். ஏதோ சில இயக்குநர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட வலி, அவர்கள் சார்ந்த சமுதாயம் பட்ட பாட்டை ஒரு கோணத்தில் சொல்கிறார்கள். பேரரசு குறிப்பிடும் போது, ‘உங்கள் வலியை சொல்லுங்கள். ஆனால் மற்றவர்களுக்கு வலிக்கிற மாதிரி சொல்லாதீர்கள்’ என சொன்னார். என்னைப் பொறுத்தவரை, சாதிய பிரச்சினை கொடுமைகளில்  யாரும் கஷ்டப்படவில்லை என நான் சொல்லவில்லை. ஆனால் சுதந்திரம் அடைந்ததில் இருந்து எவ்வளவோ முன்னேறி விட்டோம். நாடு ரொம்ப முன்னேறி விட்டது. 

இன்னும் 20 முதல் 30% மக்கள் அடிமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் முன்னேறி வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பின் தங்கிய மக்களுக்கு ஏராளமான சலுகைகள் தருகிறார்கள். அவர்கள் சமுதாயம் சார்ந்த தலைவர்கள், படிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

விஜய்யின் அரசியல் குறித்து கருத்து

"சினிமா, சினிமா தியேட்டர்கள் மட்டும் தான் சாதியைப் பார்ப்பதில்லை. டிக்கெட் பணத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஏழை மக்களுக்கு உதவி செய்வோம் என சொல்கிறார்கள். ஆனால் உங்கள் படத்துக்கு  ரூ.1000க்கு டிக்கெட் விற்கிறார்கள். அரசு நிர்ணயித்த விலையை விற்க சொல்லுங்க. அதைவிட்டு விட்டு அரசியலில் வந்து என்ன பண்ணப் போகிறீர்கள்.  அதிக விலைக்கு டிக்கெட் விற்பதையே தடுக்க முடியல. பின்ன எதுக்கு ஓட்டுக்கு பணம் வாங்காதீங்கன்னு சொல்றீங்க. விஜய் நடிப்பை விட்டு அரசியலுக்கு போறதா சொல்றாங்க. பெரிய வயசு இல்ல, அதனாலே அவர் இன்னும் நடிக்க வேண்டும். விஜய் அவர் அரசியலில் இருக்க வேண்டுமா என்று மக்கள் சொல்லட்டும்” தயாரிப்பாளர் கே.ராஜன் கூறினார். 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
Embed widget