மேலும் அறிய

தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!

தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் நரேந்திர மோடியிடமும், ஒன்றிய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா? என மாணிக்கம் தாகூர் நயினார் நாகேந்திரனுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு நியாயமான தண்ணீர் உரிமையை பெற்று தர பிரதமர் மோடியிடம் ஒரு வார்த்தை பேசியிருக்கிறீர்களா என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வியெழுப்பியுள்ளார். 

பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைகட்ட முயற்சிக்கும், தமிழகத்திற்கு உரிய நீரை தரமறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசை கண்டித்தும் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ரயிலடியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “ காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா காங்கிரஸ் அரசு மறுக்கிறது. அதேசமய்ம் உரிய நேரத்தில் தண்ணீர் பெற்று தராமல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கும் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஏன் இவர்கள் யாரும் கர்நாடகாவுக்கு செல்லவில்லை” என கேள்வியெழுப்பினார். 

மாணிக்கம் தாகூர் கொடுத்த பதிலடி

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “கர்நாடகாவில் “தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட திறக்கக் கூடாது” என்று அம்மாநில பாஜக தலைவர் எடியூரப்பா  உட்பட பாஜக தலைவர்கள் நேற்று வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியதை பார்க்கத் தவறிவிட்டீர்களா, நயினார் அண்ணே ?

​ஒருவேளை பார்க்க மறந்துவிட்டீர்கள் என்றால், இதோ இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் அவர்களின் ட்விட்டர் பக்கங்களைச் சற்று பாருங்கள். காவிரி உரிமையில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடும் எடியூரப்பாவையும் கர்நாடக பாஜகவையும் எதிர்க்க உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா?

Also Read: CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!

​தமிழ்நாட்டின் நியாயமான தண்ணீர் உரிமை பெற பிரதமர் நரேந்திர மோடியிடமும், ஒன்றிய பாஜக அரசிடமோ இதுவரை ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?.. கர்நாடகாவில் தமிழ்நாட்டிற்கு எதிராகப் போராடுவது, டெல்லியில் மோடி அரசு மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிப்பது, தமிழ்நாட்டிற்கு வந்து காங்கிரஸ் மீது பழியைப் போடுவது — இதுதான் பாஜகவின் அப்பட்டமான இரட்டை வேடம்!

​உங்கள் இந்தப் பொய் நாடகத்தையும் போலி அரசியலையும் தமிழ்நாட்டு விவசாயிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
ஒரே கிளிக்கில் வருமானச் சான்றிதழ் & பட்டா பெயர் மாற்றம்: புதுச்சேரி அரசின் புதிய ஆன்லைன் சேவை அசத்தல்...!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget