மேலும் அறிய

Ravi Mohan: ரவிமோகனிடம் ரூ.40 லட்சம் கேட்டோம்.. ஆனால் மாத பராமரிப்புக்கு இல்ல.. ஆர்த்தி அம்மா கண்ணீர் பேட்டி

எந்த தாயும் பிள்ளைகள் வாழ்க்கையை பிரிக்க நினைக்க மாட்டார். நாங்கள் ஒன்றும் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணவில்லை. 10 ஆயிரம் பேரை கூப்பிட்டு தான் நிகழ்ச்சி நடத்தினோம் என சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ரவிமோகன் - ஆர்த்தி விஷயத்தில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் மனதார வரவேற்பதாக ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

ரவிமோகன் - ஆர்த்தி விவாகரத்து

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை கடந்த 2024ம் ஆண்டு விவகாரத்து செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாடகி கெனிஷாவுடன் இருந்த உறவு தான் இந்த விவகாரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் சில மாதங்கள் முன்பு கெனிஷாவும் ரவிமோகனை விட்டு விலகுவதாக அறிவித்தார். 

நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு

இதற்கிடையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சமீபத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆர்த்தி தரப்பில் ரூ.40 லட்சம் கோரப்பட்ட நிலையில் அதனை நிராகரித்த நீதிமன்றம் மாதம் ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் மகன்கள் ஆரவ் மற்றும் அயானை எவ்வித தடையுமின்றி சந்திக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டது.

மாமியார் சுஜாதா விஜயகுமாரின் குமுறல்

இந்த நிலையில் ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ரவி மோகனிடம் ரூ.40 லட்சம் மாதந்தோறும் பராமரிப்பு செலவுக்கு தருமாறு நாங்கள் கேட்கவில்லை. அந்த பணம் எல்லாருக்கும் பெரிய விஷயம். எனினும் எங்க தலையில் ரவிமோகன் வச்சிட்டு போன கடன் இருக்கிறது. 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எந்தவித சலுகையும் செய்யவில்லை. உணவுக்கு கூட பணம் கொடுக்கவில்லை. சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம். ஆனால் போன்றவற்றிற்பள்ளிக் கட்டணம், உணவுக்கு செய்ய வேண்டியது கடமையாகும். ரவி மோகன் விட்டுச் சென்ற கடனால் வீடு ஜப்திக்கு வந்தது போன்றவையெல்லாம் எந்த பெற்றோரும் பார்க்கக்கூடாத ஒன்றாகும். 

இரண்டு பசங்களும் அமெரிக்கன் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் ஆண்டுக்கு பள்ளிக் கட்டணம் மட்டுமே ரூ.86 லட்சம் வருகிறது. அதனை ரவிமோகன் தான் கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிவித்தார். 

தொடர்ந்து ரவிமோகன் பில்லி சூனியம் போன்றவை செய்து தன்னை கட்டுப்படுத்தியதாக சொன்ன குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, 15 ஆண்டுகள் மாயாஜால வேலைகள் செய்து ரத்த வாந்தி எடுக்க வைத்ததாக சொல்கிறாரே.. அப்படி என்றால் எப்படி உயிருடன் இருக்க முடியும். அதெல்லாம் இந்த காலத்தில் நம்புகிறார்களா என தெரியவில்லை. அதை செய்து தான் நாங்கள் கட்டுப்படுத்தினோம் என்றால் அன்று ஹீரோவாக உச்சத்தில் இருந்தவர், இன்று எப்படி இருக்கிறார் என யோசித்து பாருங்கள். 

என் பேரன் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு அமெரிக்கா செல்ல விரும்பினான். கடைசி நேரத்தில் தான் பாஸ்போர்ட் காலாவதியாகப் போவதாக எங்களுக்கு தெரிய வந்தது. பெற்றோராக அதில் ரவிமோகனும் கையெழுத்திட வேண்டும். இதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தில் என் பேரன் 6 மணி நேரம் காத்திருந்தும் வருவதாக சொல்லி விட்டு வரவில்லை. மறுபுறம் எங்களுக்கு பக்கம் பக்கமாக நான் கையெழுத்து போட மாட்டேன். நான் ஒன்றும் ஏடிஎம் கிடையாது என மெசெஜ் அனுப்புகிறார். 

நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆர்த்தி, குழந்தைகள், ரவி மோகன் கடந்த 2 ஆண்டுகளாக சந்திக்கவில்லை. இப்போது மாதம் ஒருமுறை சனி, ஞாயிறு சந்திக்க வேண்டுமென சொல்லப்பட்டுள்ளது. இனியாவது இந்த பிரச்னை சரியாக வேண்டும். எந்த தாயும் பிள்ளைகள் வாழ்க்கையை பிரிக்க நினைக்க மாட்டார். நாங்கள் ஒன்றும் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணவில்லை. 10 ஆயிரம் பேரை கூப்பிட்டு தான் நிகழ்ச்சி நடத்தினோம். ஒரு அம்மாவாக, மாமியாராக, தயாரிப்பாளராக நான் நிறைய செய்துள்ளேன் என கண்ணீர் மல்க சுஜாதா விஜயகுமார் பேசினார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget