மேலும் அறிய

Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு

RATION SHOP : ரேஷன் கார்டில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ரேஷன் கார்டும்- அரசின் திட்டங்களும்

தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் உள்ள 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையிலும், இலவசமாகவும் அரிசி, பச்சரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அட்டை உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அடையாள ஆவணமாகவும் உள்ளது. குறிப்பாக மழை வெள்ளம் பேரிடர் காலத்தில் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே நிவாரண உதவியானது வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் தற்போது மகளிர்களுக்கு மாதம், மாதம் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கார்டு- கைவிரல் பதிவு கட்டாயம்

இந்த உரிமை தொகையை பெற ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது. எனவே மகளிர் உரிமை தொகையை பெறுவதற்காகவே 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து விணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் ரேஷன் கார்டுகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும், ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று ரேஷன்கார்டுகள் வைத்திருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலி ரேஷன்கார்டுகளை நீக்கும் வகையில், குடும்ப உறுப்பினர்கள் ஆதார் ஆவணங்கள் மூலம் இ கே ஒய் சி (e-kyc) பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பதிவு செய்யாதவர்களின் பெயர் நீக்கம்

உரிய வகையில் இ கே ஒய் சி (e-kyc)  பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் ரேஷன்கடைகளில் இ கே ஒய் சி (e-kyc) பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறையின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் (ஆகஸ்ட் 2-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

  ரேஷன் கடையில் சிறப்பு முகாம்

எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரேஷன் கார்டில் உள்ளவர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யவில்லையென்றால் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கை விரல் ரேகையை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget