K Rajan: தனுஷ் அந்த விஷயத்தில் வீக் தான்; சட்டப்படி போங்க; மீடியாவில் ஏன்? - ஓபனாக பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன்!
நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். அதனை மீடியாவில் சொல்லி சொல்லி அசிங்கப்படுத்துவது பெண்மைக்கு அழகல்ல என தயாரிப்பாளர் கே.ராஜன் கூறியுள்ளார்.
சுசித்ரா போன்றவர்கள் செய்யும் செயல்களால் மக்களிடத்தில் சினிமாவுக்கான மதிப்பு போய் விடும் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக தமிழ் சினிமாவில் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகள் தான் பேசுபொருளாக உள்ளது. தனுஷ்,கார்த்திக் குமார், திரிஷா, ஆண்ட்ரியா, பயில்வான் ரங்கநாதன் என பலரையும் தாறுமாறாக விமர்சித்து அவர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். குறிப்பாக சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் தான் காரணம் என தெரிவித்திருந்தார். சுசித்ராவின் இந்த பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் நேர்காணல் ஒன்றில் இதுபற்றி பேசியுள்ளார். அதில், “இதற்கு முன்னால் சுசித்ரா என்றால் ஒரு சில பேருக்கு தான் தெரிந்திருந்தது. ஆனால் இந்த நேர்காணலுக்குப் பிறகு எல்லாருக்கும் தெரிந்துள்ளது. தன்னுடைய பெயர் வைரலாக வேண்டும். எப்படியாவது பெயரெடுக்க வேண்டும் என வந்திருக்கிறார். சுசித்ரா அவர் குறிப்பிட்ட எல்லாருடனும் பழகியிருக்க வேண்டும். அதனால் தான் எல்லாத்தையும் சொல்லியிருக்கிறார். இதுவரை யாரும் சொல்லாததை எல்லாம் சுசித்ரா சொல்லியிருக்கிறார். தனுஷூடன் நன்றாக பழகியிருக்கிறார் என்று நினைக்கிறேன். தனுஷின் வாழ்க்கை விரிசலுக்கே அவர் எல்லாருடனும் பழகியது தான் காரணம் என சொல்கிறார்கள்.
தனுஷைப் பற்றி ஏற்கனவே கிசுகிசுக்கள் உண்டு. அதனை சுசித்ரா சொல்கிறார் என்றால் அவர் அந்த விஷயத்தில் வீக்னெஸ் ஆக இருந்திருக்கிறார் என்று தான் நினைக்கிறேன். முதலில் சுசித்ரா ஏன் திடீரென வந்து சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. சினிமாவில் பார்ட்டி என்பது சாதாரணமான விஷயமாகும். இதை பெரிதுபடுத்தி புதிதாக சொல்வது தான் விந்தையாக இருக்கிறது. புகழுக்காக செய்ய நினைத்து அதில் சுசித்ரா வெற்றி பெற்று விட்டார். இந்த மாதிரி செய்திகளால் மக்களிடத்தில் சினிமாவுக்கான மதிப்பு போய் விடும். இதெல்லாம் சமூகத்துக்கும் நல்ல செய்தி அல்ல.
பெண்களை சொல்வதை போல ஆண்களும் அடக்கமாக இருக்க வேண்டும். பெண்களை மதிக்க வேண்டும். இதில் சினிமாக்காரர்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பார்கள். அது தவறில்லை. இஷ்டப்பட்டு போறது, பழகுறது வேறு. அதனை தப்பாக சொல்ல முடியாது. மேலும் சுசித்ரா சொன்னது போல நான் கேள்விப்பட்டது வரை சென்னையில் ஆபாச பட ஷூட்டிங் எல்லாம் நடந்தது இல்லை.நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். அதனை மீடியாவில் சொல்லி சொல்லி அசிங்கப்படுத்துவது பெண்மைக்கு அழகல்ல” என கே.ராஜன் தெரிவித்துள்ளார்.