Watch Video Priyanka Chopra : உக்ரைன் போர்.. காயங்கள்.. அகதிகளாக குழந்தைகள்.. உடைந்து அழுத ப்ரியங்கா சோப்ரா..
உக்ரைனில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 90% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் அகதிகளாக நாட்டு எல்லையைக் கடந்துள்ளதாகவும் பிரியங்கா வேதனைத் தெரிவித்துள்ளார்.
யுனிசெப் (UNICEF-ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) அமைப்பில் நீண்ட காலமாக பங்காற்றி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, முன்னதாக, உக்ரைன் போரால் பாதிக்கப்பட்டு, போலந்து நாட்டுக்குச் சென்று சிக்கித் தவித்து வரும் அகதிகளை சந்தித்துள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்றை பிரியங்கா சோப்ரா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ”போரின் கண்ணுக்குத் தெரியாத காயங்களை நாம் பொதுவாக செய்திகளில் பார்க்க முடியாது. வார்சாவில் எனது யுனிசெப் பணியின் முதலாம் நாளை இன்று நான் தொடங்கியபோது எனக்கு அவை மிகவும் தெளிவாகத் தெரிந்தன.
உக்ரைனில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை போர் பற்றிய பொட்டில் அறையும் உண்மை. இங்கு எல்லையைக் கடக்கும் மக்களில் 90% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
View this post on Instagram
போரிலிருந்து தப்பியோடியவர்களில் 70% பேர், எல்லையைத் தாண்டி போலந்துக்குச் சென்றுள்ளனர். இதனை முடிந்தவரை எளிதாக்க அரசாங்க ஆதரவுடன் அதிக அளவில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
UNICEF அமைப்பு இந்த அவசரநிலையை கையாளும் வகையில் போலந்து முழுவதும் 11 இடங்களிலும், அகதிகளுடன் இணைந்து பிராந்தியம் முழுவதும் 37 இடங்களிலும் புளூ டாட் மையங்களை (இடம்பெயரும் அகதிகளுக்கான மையங்கள்) அமைத்துள்ளது.
ப்ளூ டாட் மையங்கள் மிகவும் அவசியமான பாத்திரத்தை வகிக்கின்றன. முக்கியமாக இங்கு பெரும்பாலும் உக்ரேனியர்களே (போரில் இருந்து தப்பி வந்த உக்ரேனியர்கள் உள்பட) பணியமர்த்தப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் 150 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களும் ராணுவ வீரர்களும் உயிரிழந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் உள்ளூர் பொருளாதாரம் தொடங்கி உலகப் பொருளாதாரம் வரை ஆட்டம் கண்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்