மேலும் அறிய

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!

காவிரி விவகாரத்தில் திமுக தங்களது மந்திரி பதவியை உதறியதா? என்று மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும், மேகதாது அணை கட்டக்கூடாது என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகம் செல்வதாக இருந்தது. ஆனால், தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகம் வர வேண்டாம் என்று அந்த மாநில முதலமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்:

இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்தார் என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தார். இந்த நிலையில், மு.க.ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் தவெக ஐடி விங் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளனர். அதில் அவர்கள் பதிவிட்டுள்ளதாவது, 

விவசாயிகள் நலன்களுக்காகவும் கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சரின் மனசாட்சி உள்ள மக்களாட்சி. திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.

காவிரிக்காக பதவியை உதறியதா திமுக?
 
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?

அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.

காரியப் பூனை:
 
ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.
 
எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.

பேச முடியுமா?
 
எனவே, காவிரிப் பிரச்சனையில் ஸ்டாலினின், திமுக ஆட்சி போய்விட்டதே,  தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Dams In Karnataka:
Dams In Karnataka: "கேஆர்எஸ் முதல் கபினி வரை.." காவிரி குறுக்கே கர்நாடக கட்டிய அணைகள் எத்தனை?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Embed widget