மேலும் அறிய

Priyanka Chopra Jonas | நன்றி ப்ரியங்கா.. முத்தமிட்டு விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நிக் ஜோனஸ்

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் விவாகரத்து என்று சில நாட்களாக கிளம்பியிருந்த புரளிகள் அடங்கும் விதமாக இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நிக் ஜோனஸ்.

2000ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, 2002இல் தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல இந்திப் படங்கள் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பாலிவுட் திரையுலகில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுத்துள்ள அவர், ஹாலிவுட் பட உலகில் நுழையும் முன்பாக, குவான்டிகோ என்ற அமெரிக்க டி.வி தொடரில் நடித்து உலக அளவில் பிரபலமானார். பே வாட்ச், எ கிட் லைக் ஜேக், போன்ற படங்கள் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றிகரமாக வலம் வருகிறார். 2018ஆம் ஆண்டு, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோனாசை காதல் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா சோப்ரா. இந்நிலையில் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா, தமது சமூக ஊடக கணக்கில் தமது பெயருடன் சேர்க்கப்பட்டிருந்த கணவர் நிக் ஜோனாசின் பெயரை நீக்கியிருந்தது, அவர் விவாகரத்துக்கு தயாராகி வருவதாக ஓர் சந்தேகத்தை சமூக ஊடகங்களில் எழுப்பியிருந்தது.

ஆனால் நேற்று இரவு இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் நிக் ஜோனஸ் பிரியங்கா சோப்ராவிற்கு முத்தம் அளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு  'grateful for you' என்று எழுதி ப்ரியங்கா சோப்ராவை டேக் செய்துள்ளார். இதே போன்று, இரு நாட்கள் முன்னர் கணவர் நிக் ஜோனாஸ் இரவு உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டார். அதற்கு பதில் பதிவிட்ட பிரியங்கா சோப்ரா ("Damn! I just died in your arms...") உன்னிடத்தில் என்னை தொலைத்து விட்டேன் என காதல் ரசம் சொட்டும் எமோஜி போட்டு கமென்ட் செய்துள்ளார். இதன் மூலம் விவாகரத்து என்பது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Nick Jonas (@nickjonas)

ஏற்கனவே திருமணம் முடிந்த மூன்று மாதங்களிலேயே, இருவருக்கும் கருத்து வேறுபாடு என்றும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்றும் வதந்திகள் பரவின. அதற்கு தனது செய்தித் தொடர்பாளர் மூலம் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விளக்கமளித்தார் பிரியங்கா. இந்த நிலையில், தற்போது மீண்டும் நிக் ஜோனாசை அவர் விவாகரத்து செய்ய ஆயத்தமாகி வருவதாக பரவிய வதந்திக்கு ஏறக்குறைய முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். உலகளவில் பிரபலமான கீனு ரீவ்ஸின் மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா, அந்த படத்தின் வெளியீடு தொடர்பான பதிவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget