Prithviraj Sukumaran: ஹேமா கமிட்டி அறிக்கை எனக்கு அதிர்ச்சியாக இல்லை; அதில் நானும் ஒருவன்: ஷாக் கொடுத்த பிரித்விராஜ்
Prithviraj Sukumaran : ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானது குறித்து நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் தெரிவித்த கருத்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
மலையாள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தற்போது தான் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. மலையாள திரையுலகை சேர்ந்த பலருக்கும் இது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பாலியல் தொந்தரவுகள் என்பது அனைத்து இடங்களில் இருந்து வந்தாலும் திரைத்துறையில் அது அதிகமாகவே உள்ளது. டோவினோ தாமஸ், தீபா தாமஸ், பிளெஸ்ஸி, ஊர்வசி உள்ளிட்ட பல பிரபலங்களும் ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்து வந்தாலும் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது பல தரப்பினருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் மலையாள திரையுலகில் தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என பல பரிணாமங்களை எடுத்துள்ள பிரித்விராஜ் சுகுமாறன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் இந்த ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து தன்னுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்த கமிட்டியின் மூலம் நடத்தப்படும் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீதும் நிச்சயம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதே போல தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் பேசுகையில் அம்மா சங்கம் சரியாக செயல்படாது பற்றி தெரிவித்ததோடு ஹேமா கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை தனக்கு எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை, ஏனெனில் அந்த கமிட்டி உருவாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன் என கூறி இருந்தார். அம்மா சங்கம் சரியாக செயல்படவில்லை. அதில் ஒரு பெண் உறுப்பினராவது இருக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார் நடிகர் பிரித்விராஜ்.