மேலும் அறிய

Prashanth about Vijay : தம்பி விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா? 'தி கோட்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பிரஷாந்த் சொன்ன அந்த விஷயம்...

Prashanth about Vijay : நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 'தி கோட்' படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் நடிகர் விஜய் பற்றிய தனது கருத்தை தெரிவித்து இருந்தார் நடிகர் பிரசாந்த்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கோட்'. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ள இப்படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, ஜெயராம், மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, வைபவ், அஜ்மல், பிரேம்ஜி என மிக  பெரிய திரை பட்டாளமே நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 5ம் 'தி கோட்' திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில்  வெளியாக உள்ளது. உலகத்தின் மூளை முடுக்கில் உள்ள அனைத்து விஜய் ரசிகர்களும் இப்படத்தின் ரிலீசுக்காக உற்று நோக்கி வருகிறார்கள். 

Prashanth about Vijay : தம்பி விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா? 'தி கோட்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பிரஷாந்த் சொன்ன அந்த விஷயம்...

'தி கோட்' படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் படக்குழுவினர் மிகவும் மும்மரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்படத்தின் பிரஸ் ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் பிரஷாந்த் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருந்தார்.

கோட் படத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படத்தின் கதையை பற்றி முதலில் இயக்குநர் என்னிடம் சொல்லும் போது இது விஜய் படம் தான் ஆனால் ஒரே பிரேமில் விஜய், நீங்கள் மற்றும் பிரபு தேவா மூவரும் சேர்ந்து டான்ஸ் பர்ஃபார்மன்ஸ் செய்வது போன்ற ஒரு பாடல் உள்ளது என சொல்லி தான் என்னை கவர்ந்தார். அதுதான் இந்த படத்தில் நான் நடிக்க ஓகே சொன்னதற்கான ஹூக் லைன். 

வெங்கட் பிரபு பார்ப்பதற்கு மிகவும் அமைதியானவராக ஜாலியான எளிமையானவராக தெரியலாம் ஆனால் அவரின் விஷன் மிக பெரியது. பயங்கரமான மூளைக்காரர். படத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். அனைவரையும் ட்ரைலருக்குள் கொண்டு வரவேண்டும் என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல. ஆனால் அதை மிகவும் சாமர்த்தியமாக செய்துள்ளார். இது போன்ற ஒரு நல்ல படம் எப்போதாவது தான் கிடைக்கும் . அதில் எனக்கு ஒரு வாய்ப்பை அமைத்து கொடுத்ததற்கு மிக்க நன்றி. 

Prashanth about Vijay : தம்பி விஜய் எப்படிப்பட்டவர் தெரியுமா? 'தி கோட்' ப்ரீ ரிலீஸ் ஈவென்ட்டில் பிரஷாந்த் சொன்ன அந்த விஷயம்...

நடிகர் விஜய் பற்றி பேசியே ஆகவேண்டும். பலரும் விஜய் பிரதர் பற்றி பல விஷயங்கள் சொல்வார்கள். என்னை பொறுத்தவரையில் மிகவும் அடக்கமான ஒரு மனிதர். மற்றவர்களுக்காக நிறைய யோசிக்க கூடியவர். இந்த படத்தின் மூலம் எனக்கு இரண்டு பிரதர்கள் கிடைத்துள்ளனர். ஒருவர் தம்பி விஜய் மற்றவர் அண்ணன் பிரபுதேவா. தி கோட் படத்துக்கு நன்றி என பேசி இருந்தார் நடிகர் பிரஷாந்த். 

ALSO READ | The Goat : ராயன் பட வசூலை இரண்டே நாளில் அடிக்கும்.. பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கப்போகும் விஜய்

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
CM Vijay Achievement : மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
மாஸ் காட்டும் CM விஜய்.! 100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு- கொத்து கொத்தாக வேலை வாய்ப்பு- அசத்தும் TVK அரசு
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Embed widget