மேலும் அறிய

நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன், என் மீது நீங்கள் பொழிந்த அன்பு மகத்தானது... பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

”நீங்கள் திரையரங்குகளில் சிரித்துக் கொண்டாடுவதை நான் கதவு ஓரங்களில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் முகங்களில் உள்ள மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி, இதையே நான் விரும்பினேன்” - பிரதீப் ரங்கநாதன்

2019ஆம் ஆண்டு கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி கவனமீர்த்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே பட வெற்றியின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

2கே கிட்ஸ் எனப்படும் இன்றைய இளைஞர்களின் காதலைப் பற்றிய கதைக்களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பலம் சேர்த்துள்ளார். பிரதீப் ரங்கநாதனுடன் நடிகை இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நவம்பர் 4ஆம் தேதி வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து திரையரங்குகளில் நாளுக்கு நாள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் மூன்று நாள்களில் மட்டும் 14 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ள நிலையில், விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், தான் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள இப்படத்துக்கு வரும் வரவேற்பைக் கண்டு அகமகிழந்து போயுள்ள பிரதீப் ரங்கநாதன் முன்னதாக இன்ஸ்டாகிராமில் இது குறித்து உணர்ச்சிகரமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

”இது உண்மையில் நடக்கிறதா? நான் கேட்கும் மற்றும் பார்க்கும் விஷயங்கள் உண்மையா? படக் காட்சிகளின் எண்ணிக்கை, நள்ளிரவு காட்சிகளின் எண்ணிக்கை , படம் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

நேற்று திங்கட்கிழமை, நண்பகல் காட்சிகள் கூட திரையரங்கில் ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதைப் பார்த்தேன், குடும்பங்களும், ரிப்பீட் ஆடியன்சும்  மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டுக்கு வெளியேயும் அதே வரவேற்பு கிடைத்துள்ளது.

நான் நட்சத்திரம் இல்லை, நான் உங்களில் ஒருவன், நீங்கள் என் மீது பொழிந்த இந்த அன்பு மகத்தானது. நான் உங்களை நம்பினேன், நீங்கள் என்னைக் கைவிடவில்லை, அதற்கு மாறாக என்னை ஆகாயத்தில் மிதக்க வைத்து விட்டீர்கள்.  என்னை நம்பியதற்கு ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ்.அகோரம் சாருக்கு நன்றி. நீங்கள் திரையரங்குகளில் சிரித்துக் கொண்டாடுவதை நான் கதவு ஓரங்களில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் முகங்களில் உள்ள மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி, இதையே நான் விரும்பினேன்.

View this post on Instagram
 
A post shared by Pradeep Ranganathan (@pradeep_ranganathan)

நீங்கள் என்னை நேசிப்பதையும், எனக்கு ஆதரவளிப்பதையும் பார்க்கையில், நான் உங்களை மேலும் அதிகமாக நேசிக்கிறேன் என்பதையே உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். பிரதீப் ரங்கநாதனின் இந்தப் பதிவில் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் 'கரிகாலா' – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget