”லவ் பண்ண பொண்ணு விட்டுட்டு போனா... நீங்க சொல்லும் ரெண்டு வார்த்தை” - ’DUDU’ மூவி அப்டேட்! தனது பாணியில் சொன்ன பிரதீப்!
ட்யூட் திரைப்படம் குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் புதிய அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

தன்னுடைய நடிப்பில் வெளியாக உள்ள ’ட்யூட்’ (DUDE) திரைப்படம் குறித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் புதிய அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.
புதிய திரைப்படம்:
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமனவர். இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற திரைப்படத்தை தானே இயக்கி அந்த படத்தில் நயகனாகவும் நடித்து கலக்கினார். அதே போல் ட்ராகன் திரைப்படத்திலும் நடித்தார். இந்த படத்தின் வெற்றியின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கராவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ட்யூட் (DUDE) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்திருக்கிறார். மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறர். இந்த படத்தில் முதல் பார்வை யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ட்யூட் திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது.
அந்த ரெண்டு வார்த்தை:
இந்த நிலையில் தான் ட்யூட் படம் தொடர்பான அப்டேட் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் கொடுத்துள்ளார் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "இனிமே லவ் பண்ற பொண்ணு விட்டுட்டு போனா அவள பாத்து இந்த ரெண்டு வார்த்த சொல்லுங்க.. அந்த ரெண்டு வார்த்த என்ன”என்றும், “இது தொடர்பான அப்டேட் நாளை 4.35 மணிக்கு வெளியாகும்”என்றும் கூறியுள்ளார். தற்போது ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
Inime love panra ponnu vittutu ponaa avala paathu intha rendu vaartha sollunga..
— Pradeep Ranganathan (@pradeeponelife) September 17, 2025
Guess the 2 words..#Dude Second gear update at 4.35 PM tomorrow.
சிலர் நகைச்சுவையான கமெண்டுகளையும் பிரதீப் ரங்கநாதனை டேக் செய்து பதிவு செய்துள்ளனர்.






















