(Source: ECI/ABP News/ABP Majha)
Salaar Update: முரட்டுத்தனமான அப்டேட்டா இருக்கு... பிரபாஸ்-KGF இயக்குனர் இணையும் சலார் அப்டேட் ரிலீஸ்!
பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தின் அப்டேட் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மதியம் 12:58 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் படத்திற்கு, இந்த ஆண்டு அப்டேட் கொடுத்திருக்கிறது சலார் டீம். பிரபாஸ் நடிக்க, கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்குகிறார்.
ரிலீஸ் அப்டேட்
பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் அப்டேட் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று மதியம் 12:58 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அப்டேட்டின் படி, சலார் திரைப்படம் அடுத்த வருடம் (2023) செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
'𝐑𝐄𝐁𝐄𝐋'𝐋𝐈𝐍𝐆 𝐖𝐎𝐑𝐋𝐃𝐖𝐈𝐃𝐄 𝐎𝐍 𝐒𝐄𝐏 𝟐𝟖, 𝟐𝟎𝟐𝟑.#Salaar #TheEraOfSalaarBegins#Prabhas @prashanth_neel @VKiragandur @hombalefilms @shrutihaasan @PrithviOfficial @IamJagguBhai @sriyareddy @bhuvangowda84 @RaviBasrur @shivakumarart @anbariv @SalaarTheSaga pic.twitter.com/8vriMflG84
— Salaar (@SalaarTheSaga) August 15, 2022
பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் பிரபாஸ். ஆனால் அதன் பின்னர் வெளியான ‘சாஹோ' ‘ராதே ஷ்யாம்’ ஆகிய இரு படங்களும் தோல்வியை சந்தித்து. இதனிடையேதான் கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் பிரசாந்த் நீலுடன் பிரபாஸ் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில், பிரபாஸுக்கு ஜோடியாக கமல் மகள் ஷ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
View this post on Instagram
முன்னதாக பிரசாந்த் நீல் இயக்கி, கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் பாகுபலி பாகம் 1 வசூலித்த மொத்த வசூலை படம் வெளியான 7 நாட்களில் வசூலித்து சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் வசுலித்த தொகையை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து வசூல் வேட்டை நிகழ்த்திய கே.ஜி.எஃப் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
19 வயது எடிட்டர்
இந்தப்படத்தில் யஷ்ஷூக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். புவுனா கெளடா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குல்கர்னி படத்தொகுப்பு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது