மேலும் அறிய

Adipurush: தியேட்டருக்கு வரும் ஹனுமன்.. பார்க்க குவியும் கூட்டம்.. இதுவரை 1.70 லட்சம் பேர் முன்பதிவு...!

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு ‘ராதே ஷ்யாம்’ படம் வெளியானது. இந்த படம் படுதோல்வி அடைந்த நிலையில் அடுத்ததாக அவர் ஆதிபுருஷ், சலார், ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. வால்மீகி எழுதிய ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இயக்குநர் ஓம் ராவத்  இயக்கியுள்ள இந்த படத்தில் ராமனாக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில்  ஆதிபுருஷ் உருவாகியுள்ளது. 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் இப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே  பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 

முன்னதாக கடந்தாண்டு வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசர் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டு கிராபிக்ஸ் பணிகள் மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஜூன் 6 ஆம் தேதி திருப்பதியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்ற ஆதிபுருஷ் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனையடுத்து வெளியான ட்ரெய்லரும் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திபடுத்தவில்லை. 

இந்நிகழ்வில் இயக்குநர் ஓம் ராவத், ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டரில் ஹனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடமும், விநியோகதஸ்களிடமும் வேண்டுகோள் விடுக்க அதுவும் கடும் விமர்சனத்தை சந்தித்தது. இதற்கிடையில்  இந்தியா முழுவதும்  ஆதிபுருஷ் படத்தின் முன்பதிவு கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் 3 நாட்களில் மட்டும் இந்தியா முழுவதும் கிட்டதட்ட 1.70 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 1.30 லட்சம் டிக்கெட்டுகள் இந்தி பதிப்பில் வெளியாகும் ஆதிபுருஷ் படத்துக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதிபுருஷ் படத்தின் கலெக்‌ஷன் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும்  3 நாட்கள் உள்ள நிலையில் மேலும் டிக்கெட் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Embed widget