மேலும் அறிய

Irfan meets Kamalhassan: உலகநாயகனை குடும்பத்துடன் நேரில் சந்தித்த பிரபல யூடியூபர்... திருமண அழைப்பிதழை வழங்கி ஆசி பெற்ற இர்பான்  

பிரபல யூடியூபர் இர்பான், உலகநாயகன் கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் சந்தித்து தனது திருமண அழைப்பிதழை வழங்கி அவரின் ஆசி பெற்றார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

இன்றைய தலைமுறையினர் மத்தியில் நடிகர்கள் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறார்களோ அதே போல யூடியூபர்களுக்கும் ஏராளமான  ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி உணவு பிரியராக யூடியூபில் பிரபலமானவர் இர்பான். இவரின் யூடியூப் சேனலை 3.53 மில்லியன் சப்ஸ்கரைபர்கள் பின்தொடருகிறார்கள். 

பிரபலமான யூடியூபர் :

பலவகையான உணவுகள் குறித்து பலருடன் கலந்துரையாடல் செய்யும் இவரின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரல். இந்தியா மட்டுமின்றி உலகளவில் உள்ள பல ஹோட்டல்களின் உணவுகள் குறித்த வீடியோவையும் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி உள்ளார்.  உணவு குறித்த வீடியோ மட்டுமின்றி பல சாகச வீடியோக்களையும் போஸ்ட் செய்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 

Irfan meets Kamalhassan: உலகநாயகனை குடும்பத்துடன் நேரில் சந்தித்த பிரபல யூடியூபர்... திருமண அழைப்பிதழை வழங்கி ஆசி பெற்ற இர்பான்  

மிகவும் பிரபலமான இர்பான் சமீப காலமாக பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பல செலிபிரிட்டிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

உலகநாயகனை நேரில் சந்தித்த இர்பான் :

இர்பான் தற்போது பல பிரபலங்களை தாய் மற்றும் சகோதரியுடன் நேரில் சென்று சந்தித்து தனது திருமண அழைப்பிதழை  வழங்கி வருகிறார். வரும் 14ம் தேதி இர்பானுக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை குடும்பத்துடன் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் வைரலாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகிறது.    

Irfan meets Kamalhassan: உலகநாயகனை குடும்பத்துடன் நேரில் சந்தித்த பிரபல யூடியூபர்... திருமண அழைப்பிதழை வழங்கி ஆசி பெற்ற இர்பான்  

அந்த வகையில் சில திங்களுக்கு முன்னர் ஆளுநர் ஆர். என். ரவியை குடும்பத்துடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார். அந்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது. 

நிறுத்தப்பட்ட திருமணம் :

இர்பானுக்கு கடந்த 2021ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்று  ஆறு மாத இடைவெளியில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இர்பான் அந்த திருமணத்தை நிறுத்தி விட்டார். மணப்பெண்ணின் கருத்துக்களும் இர்பான் கருத்துக்களும் ஒத்துப்போகாத காரணத்தால் இர்பானே திருமணத்தை நிறுத்தியதாக அவரே ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு மனரீதியாக தான் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy Anand

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget