சன் டிவிக்கு நோ.. இனி விஜய் டிவிதான்..! சீரியல் டூ சீரியல் தாவிய சின்னத்திரை நடிகர்!
‘பூவே உனக்காக’ தொடரில் இருந்து விலகிய நடிகர் அருண் வெப் தொடரில் நடித்தார். அந்தத் தொடர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது.
சன் டிவியின் பிரபல சீரியலில் நடித்து வந்த நடிகர் விஜய் டிவிக்கு தாவியுள்ளார். சன் டிவியின் மிகவும் பிரபலமான சீரியல் ‘பூவே உனக்காக’. இந்த சீரியலில் நடிகர், நடிகைகள் அடிக்கடி மாறிமாறி வருவது வழக்கமாக ஒன்றாகிவிட்டது. சீரியலின் முக்கியமான கதாபாத்திரங்களான ஹீரோ, ஹீரோயின் போன்றவர்களும் மாறினார்கள். இருப்பினும், சீரியலுக்கான வரவேற்பு குறைந்தபாடில்லை. எத்தனை பேர் மாறினாலும், சீரியல் நன்றாக இருக்கும் என்பதற்கு ‘பூவே உனக்காக’ யே உதாரணமாக குறிப்பிடலாம். அந்தளவிற்கு குடும்ப பெண்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.
இந்த சீரியலில் ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்தவர் நடிகர் அருண். திடீரென்று அவர் பாதியில் இருந்து சீரியலில் வெளியேறினார். கடந்த ஆண்டு அருண் வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக விஜய் டிவி புகழ் அசீம் ஹீரோவாக நடித்தார். அவர் வந்தவுடன் சீரியலும் இன்னும் சுவாரஸ்யமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், வேகமும் பிடித்தது.
இதனிடையே, ‘பூவே உனக்காக’ தொடரில் இருந்து விலகிய நடிகர் அருண் வெப் தொடரில் நடித்தார். அந்தத் தொடர் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது, அருண் விஜய் டிவியில் வரும் சீரியலில் நடிக்கவிருக்கிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான ‘நம்ம வீட்டு பொண்ணு’ சீரியலில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதனை அருணே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். சேனலுக்கு சேனல் நடிகர், நடிகைகள் மாறுவது இயல்புதானே என்று அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்