HBD Pooja Hegde: ரசிகர்களை கவர்ந்த பார்பி பொம்மை.. நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாள் இன்று..!
HBD Pooja Hegde : ‛மலமா பித்தா பித்தாதே ..மலமா பித்தா பித்தாதே.. மலமா பித்தா பித்தாதே..’ என தமிழ் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார் பூஜா ஹெக்டே.
புட்டபொம்மா புட்டபொம்மா என்ன சுத்த விட்டியே... என ஒரு பார்பி டால் போன்ற ஒரு தோற்றத்தில் இடுப்பை வளைத்து வளைத்து ஆட்டி ரசிகர்களை சொக்கவைத்த பூஜா ஹெக்டே இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
என்றும் ஸ்வீட் 16 லுக் :
இந்த பொண்ணுக்கு எத்தனை வயசானாலும் அது ஸ்வீட் 16 போன்ற ஒரு லுக் குடுக்குதே என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் பூஜா ஹெக்டேவிற்கு தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2010ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை கைப்பற்றிய பூஜாவின் புகைப்படங்களை பார்த்து தான் இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான 'முகமூடி' படத்தில் பூஜாவை முதன்முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அவரின் அறிமுகம் நன்றாக இருந்தாலும் படத்தின் தோல்வி ஹீரோயின் பூஜாவின் வளர்ச்சியையும் பாதித்தது.
கைகொடுத்த தெலுங்கு திரையுலகம் :
தமிழ் சினிமா பூஜாவை புறக்கணித்தாலும் தெலுங்கு திரையுலகம் இந்த அழகியை ஆராதித்தது. 2014ம் ஆண்டு வெளியான 'ஓக லைலா கோசம்' தெலுங்கு திரைப்படத்தில் நாக சைதன்யா அக்கினேனி ஜோடியானார். அதை தொடர்ந்து ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் ஜோடியாக 'மொஹன்ஜ தாரோ' படத்தில் நடித்தார். இப்படத்தில் கமிட்டானதால் இயக்குநர் மணிரத்னம் அழைப்பை கூட நிராகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
முன்னணி நடிகை :
பாலிவுட் பக்கம் பூஜா சென்றாலும் தெலுங்கை விடாது இறுக பற்றிக்கொண்டார். அசுர வேட்டையாக தெலுங்கு திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என ஒரு முன்னணி நடிகையாக வளம் வந்தார் பூஜா. அவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்த காலகட்டத்தில் இருந்த பல நடிகைகள் இன்று காணாமல் போன நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக சிறப்பாக பயணித்து வரும் பூஜாவுக்கு ஒரு அப்பளாஸ்.
தமிழுக்கு ரீ என்ட்ரி :
முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறைந்து போன ஒரு முகமாக இருந்த பூஜாவுக்கு 2022ம் ஆண்டு வெளியான 'பீஸ்ட்' படம் மூலம் ரீ என்ட்ரி கிடைத்தது. இளைய தளபதி விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் மேஜிக் நிகழ்ந்தது. ‛மலமா பித்தா பித்தாதே ..மலமா பித்தா பித்தாதே.. மலமா பித்தா பித்தாதே..’ என தமிழ் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் அசத்தலான நடனம், காந்தம் போல இழுக்கும் அழகு, அளவான நடிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடினர்.
ரன்வீர் சிங் ஜோடியாக சர்க்கஸ், பிரபாஸுடன் ராதே ஷ்யாம், அகில் அக்கினேனி ஜோடியாக மோஸ்ட் எலிஜிபில் பேச்சலர், சல்மான் கான் ஜோடியாக கிசி கா பாய் கிசி கி ஜான் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். மேலும் மேலும் பல அற்புதமான வாய்ப்புகளை பெற்று பூஜா ஹெக்டே உச்சிக்கு செல்ல வாழ்த்துக்கள்.