Ponniyin Selvan1: வெளியானது அருள்மொழிவர்மனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாநாயகனான ராஜ ராஜ சோழனின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியானது.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றன.
அந்த வரிசையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி புகைப்படமும் வெளியிடப்பட்டது.
சினிமா உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க திரைப்படம் பொன்னியின் செல்வன். பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தில் திரிஷா, கார்த்திக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் சேர்ந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், தற்போது, கதையின் நாயகனான அருள்மொழிவர்மன் என்கிற மன்னர் ராஜ ராஜ சோழனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அருண்மொழிவர்மனாக நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கிறார்.
Hail the Visionary Prince, the Architect of the Golden Era, the Great Raja Raja Chola…introducing Ponniyin Selvan! #PS1 TEASER OUT TODAY AT 6PM.@madrastalkies_ @LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial pic.twitter.com/pNukbhu0nY
— Lyca Productions (@LycaProductions) July 8, 2022
பொன்னியின் செல்வன் அமரர் கல்கியின் வராலாற்று நாவலை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டது.
View this post on Instagram
தற்போது, இந்த கமெண்ட் பதிவை ரீ-ட்விட் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
Also Read | Vikram Health LIVE: நடிகர் விக்ரமுக்கு திடீர் நெஞ்சுவலி.. காவேரி மருத்துவமனையில் அனுமதி!