Ponniyin Selvan Teaser Launch LIVE: இதற்காகத்தான் எம்.ஜி.ஆர் இதில் நடிக்கவில்லை.. மணிரத்னம் உடைத்த சஸ்பென்ஸ்
Ponniyin Selvan Teaser Launch Event LIVE Updates: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

Background
Ponniyin Selvan Teaser Launch LIVE Updates:
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இன்று (ஜூலை. 08) மாலை ஆறு மணிக்கு சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த டீசர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் டீசலை சோஷியல் மீடியாவில் வெளியிடும் நட்சத்திரங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழில் நடிகர் சூர்யாவும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ் பாபுவும், கன்னடத்தில் ராக்ஷீத் ஷெட்டியும், இந்தியில் அமிதாப்பச்சனும் வெளியிட உள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இப்படம் குறித்த அப்டேட்கள் இந்த வாரம் முழுவதும் வெளியிடப்பட்டு வருகின்றன.கதாபாத்திரங்களின் லுக்கும் வெளியாகி வருகிறது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் வெளிவர உள்ள நிலையில், இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முன்னதாக டீசர் வெளியீட்டையே பிரம்மாண்டமாக பொன்னியின் செல்வன் கதைக்களமான தஞ்சாவூரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சில காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதுவரை எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக வரலாற்றில் பொறிக்கப்படும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்
பொன்னியின் செல்வன் படம் இதுவரை எடுக்கப்பட்ட சிறந்த படங்களில் ஒன்றாக வரலாற்றில் பொறிக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
An epic novel made into a film by the epic director, the genius #Maniratnam sir ❤️
— Harish Kalyan (@iamharishkalyan) July 8, 2022
I'm sure this film will be etched in history as one of the best films ever made. Can't wait to watch it. #PonniyinSelvan #PS1 @LycaProductions @arrahman https://t.co/9qHyL2qknZ
“எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் படத்தை ஏன் எடுக்கல தெரியுமா?”: சஸ்பென்ஸை உடைத்த மணிரத்னம்
“எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வன் படத்தை ஏன் எடுக்கல தெரியுமா?”: சஸ்பென்ஸை உடைத்த மணிரத்னம்#PonniyinSelvan #ManiRatnamhttps://t.co/JpTXkaqwIl
— ABP Nadu (@abpnadu) July 8, 2022





















