Ponniyin Selvan Reunion : PS1 -ன் பிரமாண்ட வெற்றி.. 50வது நாள் ரீ யூனியன்.. வைரலாகும் சோழர்களின் போட்டோஷூட்!
பொன்னியின் செல்வன் திரைப்படம் 50வது நாளில் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடியை வசூல் செய்து வெற்றி நடைபோடுகிறது. அதை ரீயூனியன் மூலம் சோழர்கள் கொண்டாடினர்.
தமிழ் சினிமா வரலாற்றில் மாபெரும் சாதனையை படைத்த திரைப்படம் பொன்னியின் செல்வன். செப்டம்பர் 30ம் தேதி வெளியான இப்படம் 50ம் நாளான நேற்றைய தினம் வரையில் 500 கோடியை வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றியை கொண்டாடி வருகிறார்கள் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்.
50வது நாள் சோழர்களின் ரீயூனியன்
பொன்னியின் செல்வன் 50வது நாளை கொண்டாடும் விதமாக படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, கார்த்தி மற்றும் சோபிதா துலிபாலா அனைவரும் ரீயூனியன் ஒன்றை ஏற்பாடு செய்து சந்தோஷமாக கொண்டாடினர். அவர்களின் சந்திப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சோபிதா துலிபாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஹேஷ்டேக் செய்துள்ளார். ஒரு போட்டோ போஸ் முகங்களை ஃபோகஸ் செய்தும், மற்றுமொரு போஸ் லோ ஆங்கிளில் கால்களை மட்டும் ஃபோகஸ் செய்தும் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். குல்ச்சாஸ் ( ரொட்டி வகை) வருவதற்குள் சில சோழர்கள். உங்களுக்கு தெரிந்தால்... என்ற ஒரு குறிப்பையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சோபிதா.
View this post on Instagram
நந்தினி எங்கே ?
இந்த போஸ்ட் லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் குவித்து வருகிறது. ஒரு சிலர் ரசிகர்கள் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராய் மட்டும் மிஸ்ஸிங் என பதிவிட்டு இருந்தனர். நடிகை ஐஸ்வர்யா ராய் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒன்று பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியாகவும், மற்றொன்று நந்தினியின் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிங்கார நாச்சியார் என்றழைக்கப்படும் மந்தாகினி தேவியாகவும் நடித்துள்ளார். இந்த தகவல் பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் மீது இருக்கும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
பாகுபலியை தோற்கடித்த பொன்னியின் செல்வன் :
பொன்னியின் செல்வன் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் 500 கோடியை வசூல் செய்த இரண்டாவது தமிழ் திரைப்படம் என்ற அந்தஸ்தை அடைந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த சாதனையை படைத்தது ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ' எந்திரன் 2.0" திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 230 கோடியை வசூல் செய்து ராஜமௌலியின் பாகுபலி படத்தின் சாதனையை முறியடித்துள்ளது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இப்படத்தின் இரண்டம் பாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி உலகெங்கிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என கூறப்படுகிறது.