மேலும் அறிய

FIR Against Mani Ratnam | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலி: மணிரத்னம் மீது எஃப்ஐஆர்

Horse Dies at Ponniyin Selvan Shooting Spot: பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது குதிரை ஒன்று பலியானதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது குதிரை ஒன்று பலியானதைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் The Animal Welfare Board of India (AWBI) விரிவான விசாரணை கோரியுள்ளது.

முன்னதாக பீட்டா இந்தியா (PETA India) எனும் விலங்குகள் நல வாரியம் ஹைதராபத் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஒரு புகார் அளித்தது. அந்தப் புகாரில், ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் குதிரை ஒன்று பலியானதாக புகார் கூறப்பட்டிருந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் மெட்ராஸ் டாக்கீஸ் மீதும் குதிரையின் உரிமையாளர் மீதும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் Prevention of Cruelty to Animals (PCA)வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் இறந்த குதிரைக்கு அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதாக அப்துல்லாபூர்மெட் காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. குதிரை படப்பிடிப்பு தளத்திலேயே புதைக்கப்பட்டது.

பீட்டா புகார் குறித்து தகவல்கள் வெளியான நிலையில், இது குறித்து விலங்குகள் நல வாரியம் ஹைதராபாத் ஆட்சியருக்கும், தெலுங்கானா மாநில விலங்குகள் நல வாரியத்துக்கும் முறையிட்டுள்ளது. அதில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன்(Ponniyin Selvan) திரைப்படத்தில் பல குதிரைகள் பயன்படுத்தப்படுவதாகவும். பல மணி நேரம் படப்பிடிப்பில் ஈடுபடுத்தப்படுவதால் அவை நீர்ச்சத்து குறைபாட்டுக்கு ஆளாவதாகவும் புகார் எழுந்துள்ளது. 
இது குறித்து பீட்டா இந்தியாவின் தலைமை அலுவலர் குஷ்பூ குப்தா கூறுகையில், கணினி கிராஃபிக்ஸ் கைவந்த கலையாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் குதிரைகளை மணிக்கணக்காக படப்பிடிப்பில் ஈடுபடுவதற்கு என்ன காரணம் கூறினாலும் அது ஏற்புடையதல்ல. முற்போக்கு சிந்தனை கொண்ட இயக்குநர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். மணிரத்னம் இதை உணர்ந்து கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸுக்கு மாற வேண்டும் என்று கூறியுள்ளார். 

தமிழ்த் திரையுலகின் நீண்ட கால பிரயத்தனம்..

தமிழ்த் திரையுலகில் எம்ஜிஆர் தொடக்கிப் பல முன்னணி இயக்குநர்கள் படமாக நான், நீ என்று போட்டி போட்டனர். ஆனால் அது கடைசி வரை கனவாக மட்டுமே இருந்தது.

இதனையடுத்து நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் நாவலை, படமாக்கும் வேலையை இயக்குநர் மணிரத்னம் கையில் எடுத்தார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட  பொருட்செலவில்  உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’.  இந்த திரைப்படத்தில்  இந்திய திரையுலகின் முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.  

FIR Against Mani Ratnam | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் குதிரை பலி: மணிரத்னம் மீது எஃப்ஐஆர்

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில்  பிரகாஷ் ராஜ்- சுந்தர சோழர் கதாபாத்திரத்திலும் , பார்த்திபன் - சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்திலும்கார்த்தி - வந்தியத்தேவனாகவும்,விக்ரம் - ஆதித்த கரிகாலனாகவும் , சரத்குமார்- பெரிய பழுவேட்டரையராகவும், ஜெயம் ரவி - அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராய் - நந்தினியாவும் த்ரிஷா -குந்தவையாகவும், ஐஸ்வர்யா லட்சுமி - பூங்குழலி என்ற கதாபாத்திரத்திலும் ,ஜெயராம் - ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற சுவாரஸ்ய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget