Ponniyin Selvan 2: த்ரிஷாவையும் என்னையும் பார்த்து விக்ரம் கடுப்பாகிட்டாரு... கண் கலங்கிய பூங்குழலி!
"நாங்கள் எவ்வளவு அழகாக ஆடை அணிந்து வந்தாலும் ஒரு கண்ணாடி, கம்மல் அணிந்து கடைசியாக விக்ரம் ஸ்டைலாக வந்து கவர்ந்துவிடுவார்" - விக்ரம்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, பார்த்திபன், ஷோபிதா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசியதாவது:
விக்ரம் ஓவர்டேக் பண்ணிடுவார்...
“பொன்னியின் செல்வன் 1 & 2 படங்களுக்கு இவ்வளவு ஆதரவு தந்ததற்கு நன்றி. மணி சாரின் பூங்குழலியா இந்தப் படத்தில் இந்த வாழ்க்கையை வாழ்வது பெருமையாக இருந்தது. இந்தப் படத்துக்காக இவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி, இவர்கள் அனைவரும் திரை தீப்பிடிக்க நடித்துள்ளனர். உங்களுடன் நான் பயணித்துள்ளேன். இதற்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை.
ஜெயம் ரவி என்னிடம் அன்பாக, நகைச்சுவையாக நடந்து கொண்டு ஒத்துழைத்ததற்கு நன்றி. நாங்கள் எவ்வளவு அழகாக ஆடை அணிந்து வந்தாலும் ஒரு கண்ணாடி, கம்மல் அணிந்து கடைசியாக விக்ரம் ஸ்டைலாக வந்து கவர்ந்துவிடுவார். ஒரு நடிகராக அவர் ஒவ்வொரு லுக்குக்கும் இப்படி மாறுவது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.
கடுப்பான விக்ரம்!
ஷோபிதா ஒரு சர்வதேச நடிகை. ஐ லவ் யூ. த்ரிஷா உள்ளும் புறமும் அழகான நடிகை. நான் அவரிடம் டிப்ஸ் கேட்டுக்கொண்டே இருப்பேன். நாங்கள் விமானத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது விக்ரம் கடுப்பாகி சென்றுவிட்டார். கார்த்தி மேடையில் பேசுவதும் படத்தில் நடிப்பதும் மிகவும் பிடிக்கும். சினிமாவை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். நான் இவர்கள் அனைவரையும் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். மணி சாரின் பூங்குழலியாக இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி” எனக் கூறி கண்கலங்கினார்.
நேற்று ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி கவனமீர்த்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து சுமார் 500 கோடிகள் வரை வசூலித்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது .
விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, ஷோபிதா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என கடந்த ஒரு வாரமாக இந்தப் படத்துக்காக தீவிர ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Leo Audio Launch: லியோ இசை வெளியீட்டு விழா சென்னையில் இல்லை: சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் விஜய்: எந்த ஊர் தெரியுமா?.