Ponniyin Selvan 2 :பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது.. திரையரங்குகளில் செய்த வசூல் இவ்ளோதானா?
பொன்னியின் செல்வன்2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
கல்கி, சோழ மன்னனான 'அருண்மொழி வர்மன்' பற்றிய கதையை, வரலாற்று சுவடுகளுடன் புனையப்பட்ட நாவலாக எழுதிய நாவல் 'பொன்னியின் செல்வன்'. இந்த நாவலை மையமாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. 500 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவான இந்த படத்தில், பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், வந்திய தேவனாக நடிகர் கார்த்தியும், நடித்திருந்தனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் நடித்திருந்தனர். பிரகாஷ்ராஜ், ஜெயராம், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா,விக்ரம் பிரபு, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து பிரம்மாண்டமாக, நேர்த்தியாக பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும் இயக்குனர் மணிரத்னம் இயக்கி இருந்தார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு படக்குழுவினர் மூலம் அதிக விளம்பரங்கள் செய்யப்பட்டது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஆகிய ஐந்து மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதனால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் சுமார் 337 கோடி வரை மட்டுமே வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. முதல் பாகத்தின் வசூலை நெருங்க முடியாத நிலையில், வெளியான ஒரு மாதத்தில் பொன்னியின் செல்வன் 2 ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் படிக்க
Karunanidhi 100 : தமிழும், தமிழ்நாடும், தமிழர்களும், கலைஞர் கருணாநிதியும்..!