Ponniyin Selvan Release LIVE: வந்தான் சோழன்.. பொன்னியின் செல்வன் கொண்டாட்டம்.. அப்டேட்ஸ் உடனுக்குடன்..
Naane Varuven Release LIVE Updates: தனுஷின் நானே வருவேன் படத்தையடுத்து, தமிழ் சினிமாவின் நீண்ட கால கனவான பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ளது.

Background
துள்ளுவது இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை தொடர்ந்து செல்வராகவன் - தனுஷ் கூட்டணி 5வது முறையாக இணைந்துள்ள படம் “நானே வருவேன்”. கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த கூட்டணியுடன் யுவனின் இசையும் இணைந்துள்ளதால் ரசிகர்களுக்கு பட அறிவிப்பு குறித்து வெளியாகும் போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகியாக இந்துஜா நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து படம் நேற்று வெளியானது.
View this post on Instagram
அதற்கு அடுத்த நாள், தமிழ் சினிமாவின் 50 வருட கனவான பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் இன்று வெளியானது.
View this post on Instagram
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோக்களின் படம் அடுத்தடுத்து வெளியாகவுள்ள நிலையில், மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. வசூல் ரீதியாக எந்தப்படும் வெல்லும், மக்களின் மனதில் எந்தப்படம் இடம்பிடிக்கும் என பெரிய கேள்விகளும் நிலவிவருகிறது. இதனையொட்டி ட்விட்டர் பக்கங்களில் மக்கள், அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர்.
Ponniyin Selvan Release LIVE : தமிழ்சினிமாவின் 70 வருட கனவு! எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா PS1
பொன்னியின் செல்வன் படத்தின் வீடியோ வடிவ விமர்சனம் :
Ponniyin Selvan Release LIVE : பொன்னியின் செல்வன் சாதித்ததா?
பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பொது மக்களின் ரிவ்யூ






















