Ponniyin Selvan 1 Review: வடஇந்தியாவில் பொன்னியின் செல்வன் ரெஸ்பான்ஸ் இது தான்!
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியில் பாசிட்டிவ் ஆன விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் இன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா,நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையர் சரத்குமார், ஆழ்வார்கடியன் நம்பியாக ஜெயராம், பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமி, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் இன்று உலகமெங்கும் ரிலீசானது. மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்பட்ட நிலையில் முன்னதாக படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போல படம் மேக்கிங்கில் சூப்பராக வந்துள்ளதாகவும், அனைத்து கேரக்டர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்தகம் படிக்காதவர்களுக்கு கூட கதை புரியும்படி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோழர்களின் வரலாற்றை கூறும் படமாக இருந்ததால் இப்படம் பிற மொழிக்காரர்களால் ரசிக்கப்படுமா என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் படத்தின் ப்ரோமோஷன்களில் இந்திய மக்கள் சோழர்களின் வரலாற்றை கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அந்த வகையில் இந்தி மொழி ரசிகர்களை படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுதொடர்பான விமர்சனங்களை காணலாம்.
Special Tweet for my luv#AishwaryaRaiBachchan aka #Nandhini omg..... she is magical on screen
— John (@JOHNPAU05968014) September 30, 2022
Last ending with #Oomairani 💥💥🙆♂️ #AishwaryaRaiBachchan natural fresh face is another level , total cinema hall full whistels for Aish performance 🥵⭐⭐⭐⭐⭐#PonniyinSelvan1
#PonniyinSelvan1 (2022)
— hariharasudhan_psk (@hari_psk) September 30, 2022
Awesome bha 💥
Arr's mesmerizing BGM & songs 🥵
Karthi & Aishwarya Rai Bachchan are the showstellers..🔥
THE CHOLAS WON
#PonniyinSelvan making some noise in Hindi version as well. Released in 1200 screen 👍👍
— Bolly_Station (@bollystation) September 30, 2022
One of the best single screen of Delhi #Delite cinema 12 pm show.#PS1 - Almost housefull 🔥#VikranVedha - 10% occupancy pic.twitter.com/8LhbZH4z4q
#PonniyinSelvan1 some Tamil pride group spoil other Tamil movie in other language by protecting one movie. Hindi and Telugu want buildup with action. even that movie hit in TN https://t.co/4JxPvghmLQ much Tamil movie get market in Telugu also. #PS1
— Funguy (@secularman1978) September 30, 2022