Pongal Festival 2022: மடித்து கட்டிய வேட்டியில் கார்த்தி.. அடுப்புக்கு தீ மூட்டும் சூர்யா - சிவகுமார் வீட்டு பொங்கல்விழா!
நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினர்.
தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே பொதுமக்கள் பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். புத்தாடை உடுத்தியும், பொங்கல் பொங்கியும், பொங்கலோ பொங்கல் எனக் கூவி இவ்விழா கொண்டாடப்படுகிறது. நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறி மகிழும் திருநாளாக இருக்கிறது பொங்கல் விழா. இன்றைய தினத்தில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
இந்நிலையில் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து தமிழர் திருநாளை கொண்டாடினர். வேட்டையை மடித்துக்கட்டிக் கொண்டு நடிகர் கார்த்தி நிற்க, அடுப்பில் பொங்கல் வைத்து நடிகர் சூர்யா தீ மூட்டுகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இன்னொரு புகைப்படத்தில் பொங்கிய பொங்கல் முன்பு சூர்யாவும், ஜோதிகாவும் அமர்ந்திருக்கின்றனர்.
Actor @Suriya_offl and his wife #Jyotika celebrating #Pongal
— Ramesh Bala (@rameshlaus) January 14, 2022
Nice pic pic.twitter.com/I1E15HQakn
நடிகர் சூரியும் தன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடினார். தன்னுடைய மகன், மகளுடன் அவர் பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
View this post on Instagram